பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
மற்றவர்களின் மனதிற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் ராசியை சனி பார்க்கிறார். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்திசாதுர்யத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.
குடும்பாதிபதி சூரியன் தொழில் ஸ்தான ராசியில் இருப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையானப் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.
பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.
கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.
மாணவர்களுக்கு புத்திசாதுர்யம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.
உடல்நலத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னேறும்.
புனர்பூசம்:
இந்த மாதம் விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.
பூசம்:
இந்த மாதம் வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம்:
இந்த மாதம் லாபம் ஈட்டுவீர்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலம் சிறக்கும். தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லாக் காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
***********
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago