பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனுஷம்:
கிரகநிலை:
ராகு பகவான் பதினைந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் ஆறாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் ஏழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 5 முதல் 11ம் தேதி வரை)
» மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 5 முதல் 11ம் தேதி வரை)
கிரக மாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் ஏழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பதினான்காவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த பிலவ வருடம் பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
எந்த வேலையையும் அதிக சிரத்தையுடனும் அதீத முயற்சியுடனும் செய்யும் அனுஷ நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மைகளைத் தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேருவார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.
பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
+: பயணங்கள் மூலம் வெற்றி
-: பணிகளைத் திட்டமிட்டுச் செய்வது நல்லது
மதிப்பெண்: 75%
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாளை வணங்கி வழிபடுங்கள். அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள்.
***********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago