மூலம், பூராடம், உத்திராடம் ; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 5 முதல் 11ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

நம்பிக்கை தரக்கூடிய வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

இதுவரை இருந்துவந்த தடைகள் அனைத்தும் விலகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தாய்வழி உறவினர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும்.

பெற்றோரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும்.

உங்களுடைய திறமை அங்கீகரிக்கப்படும். பதவி உயர்வு உள்ளிட்டவை தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பொருட்கள் விரைந்து விற்பனையாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். சிறு வியாபாரிகள் பெரு வியாபாரிகள் வரை அதிக லாபம் ஈட்டக்கூடிய வாரமாக இருக்கும்.

பெண்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
உற்சாகமான நாளாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். எந்த காரியத்திலும் லாபம் கிடைக்கக் கூடியதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சனை இன்று பேசி முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.

புதன் -
தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

வியாழன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பதட்டமாகவும் படபடப்பாகவும் இருப்பீர்கள். பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். வீண் குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தொலைதூரப் பயணங்களைத் தள்ளி வைக்க வேண்டும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவருக்கு பணி நிமித்தமான ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

சனி -
மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார நிமித்தமான சந்திப்புகள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் ஒரு சில ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும் குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். நண்பர்களால் வியாபாரம் தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
***************

பூராடம் -

அதிக நன்மைகள் நடைபெறும் வாரம்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பிரச்சினை தந்து கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டு அனைத்தையும் தீர்ப்பதற்கான வழிவகைகள் கிடைக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக தாயாரின் உடல்நலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கை தரும். தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அயல்நாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலமாக தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதிய கிளைகளைத் துவங்குவது போன்ற சிந்தனைகள் தோன்றும்.

பெண்களுக்கு கடந்த சில வாரங்களாக இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். தாமதப்பட்டு கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்போது உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும்.

மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த பணம் வரும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
நிதானம் மிக அவசியம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகப் பணிச் சுமை கூடும். தொழில் தொடர்பாக உதவிகள் தாமதமாகும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி -
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பலரும் உதவி கேட்டு வருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும்.

சனி -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு -
பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாகப் பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீகருமாரியம்மன் அன்னையை வணங்குங்கள். அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடுங்கள். அனைத்து நன்மைகளும் நடக்கும்.,வேண்டியது கிடைக்கும்.
******************

உத்திராடம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இந்த வாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தரக்கூடிய அளவிற்கு வருமானம் பெருகும். அதேசமயம் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் நிதானம் காப்பது நல்லது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் முற்றிலுமாக தீரும். உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாகக் கையாளவும். பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள்.

செவ்வாய் -
எதிர்பார்த்த பண வரவு உண்டு. குடும்பத்திற்காக அத்தியாவசிய செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். சமூக வலைதள பயன்பாட்டில் இருந்து விலகியிருங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும்.சுப காரிய பேச்சுகள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சனி -
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தார் மீதான அக்கறை கூடும்.

ஞாயிறு -
வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். அலுவலகப் பணிகளை வீட்டில் வைத்து செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனநிறைவு ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி மட்டும் தாமதமாகலாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படியுங்கள். நன்மைகள் நடக்கும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்