அஸ்வினி,  பரணி,  கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 5 முதல் 11ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -

மிகத் தீவிரமாக செயல்பட்டு காரியங்களை செய்து முடிக்க கூடிய வாரம்.

அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் அதிக அளவில் இருக்கும். அலைச்சல் அதிகரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணவரவு சரளமாக இருக்கும்.

குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையின் தேவைகள் பூர்த்தியாகக் கூடிய வகையில் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனி விரைந்து முடியும். வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக் கூடியதாகவும், முன்னேற்றத்தை தரக்கூடியதாகவும் இருக்கும்.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பணிகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியும் சாதகமாக இருக்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வழிமுறைகளைக் கையாண்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.

தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு தடைபட்டிருந்த முயற்சிகள் அனைத்தும் நீங்கும். முன்னேற்றப் பாதைக்குச் செல்வீர்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அலைச்சல் அதிகரித்தாலும் லாபத்தில் குறைவிருக்காது.

செவ்வாய்-
மனதில் தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புதன்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

வெள்ளி-
அலுவலகத்தில் பணி தொடர்பாக கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்படும். வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிறிய அளவிலான கடன் ஒன்று அடைபடும் வாய்ப்பு உள்ளது.

சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபாரப் பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஆறுமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************

பரணி -

வாய்ப்புகளைத் தேடி ஓடிக்கொண்டு இருந்த உங்களுக்கு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடிய வாரம்.

வருமானம் இருமடங்காக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும் அல்லது அடகு வைத்த நகைகளை மீட்க வாய்ப்பு உண்டாகும்.

புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டாகும். கூட்டாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வெளிநாட்டு தொடர்பு உடைய நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் இந்த வாரத்திலேயே நல்ல பதில் கிடைக்கப் பெறுவீர்கள்.

பங்கு வர்த்தகத் துறையில் கணிசமான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

இதுவரை வேலை இல்லாமல் இருந்த நிலையெல்லாம் மாறி, வேலைவாய்ப்பு கிடைக்கும் ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும்.

ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். தாய் தந்தையரின் உதவியோடு சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
நிதானமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். நிதானமாக இருங்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். அலுவலக சக ஊழியருக்கு முக்கிய பணிகளில் உதவி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சனி-
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டியது வரும். முக்கிய பணி தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும்.

ஞாயிறு -
பயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
******************

கார்த்திகை -

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் வாரம்.

குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவு, பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி ஆகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் தகவல் உறுதியாகி மனமகிழ்ச்சி தரும்.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகி அரசின் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும், வியாபார நிமித்தமாக பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ரியல்எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும்.
மாணவர்களுக்கு புதிய கல்வி அல்லது கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உறுதியாகி ஒப்பந்தம் ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் -

பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
தேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வரும். அலுவலகத்திலிருந்து நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்.


வியாழன் -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். உறவினர்களிடம் கவனமாகப் பேசுங்கள்.

வெள்ளி -
அதிகப்படியான நன்மைகள் நடைபெறும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வருமானம் திருப்திகரமாக இருப்பதால் மனநிறைவு ஏற்படக்கூடிய நாள்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக அயல்நாடுகளிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபார நிமித்தமான பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சில எதிர்பாராத பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலய வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
***************
*

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்