- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
ராசியில் குரு, சனி - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.
இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மைகளைத் தரும்.
» துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரை
» கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள்; ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரை
கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்து செல்வது நன்மைகளைத் தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதைத் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
************************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரக அமைப்பு உள்ளது.
இந்த வாரம் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது.
மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதுர்யம் அதிகரிக்கும்.
வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது.பெண்களுக்கு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நன்மைகள் நடக்கும்.
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாகனங்கள் பயன்படுத்தும்போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: பைரவரை வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.
*******************
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியில் சூர்யன், சுக்ரன், புதன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரக அமைப்பு உள்ளது.
இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும்.
அனைத்து விதமான நலன்களையும் பெறப் போகிறீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கடன் விவகாரங்களிலும் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.
புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உகந்த காலகட்டமிது. அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: தினமும் முருகப் பெருமானை வணங்குவது நன்மைகளைத் தரும். எதிர்ப்புகளை முறியடிக்கும்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago