கடக ராசி அன்பர்களே! ஏப்ரல் மாத பலன்கள்; சுபச் செலவு; குழப்பம் தீரும்; தம்பதி ஒற்றுமை; விவேகம் தேவை! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுர்யத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.
கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

மாணவர்களுக்கு புத்திசாதுர்யம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் எல்லா பிரச்சினைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மைகளைத் தரும்.

பூசம்:
இந்த மாதம் பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்தவொரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் குறையும்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களைப் போக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 2, 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்