கிழமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நாம், அன்றைய திதிகளுக்கு ஏனோ அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதே இல்லை. அதேபோல், ராசி குறித்து பார்க்கிறோமே தவிர, நட்சத்திரங்கள் பற்றிய முழுமையான புரிதல் நம்மில் பலரிடம் இல்லை. ஊர்ப்பெயரும் தெருவும் குறிப்பது ராசி என்றால், வீட்டு எண்ணையும் முதல் தளமா, இரண்டாவது தளமா என்பதையும் குறிப்பது போலானதுதான் நட்சத்திரம். அதனால்தான் ராசியைச் சொல்லிவிட்டு நட்சத்திரத்தைச் சொல்கிறோம். அதிலும் நட்சத்திரமானது எந்தப் பாதத்தில் அமைந்திருக்கிறது என்று விவரிக்கிறோம்.
’சுபிட்சம் தரும் நட்சத்திர வடிவ ரகசியங்கள்’ எனும் இந்த நூல், நட்சத்திரங்களுக்கு அதீத பலத்தையும் அவை தருகிற பலனையும் விவரிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் வடிவங்கள் இருக்கின்றன. அந்த வடிவங்களை, உரிய நட்சத்திர அன்பர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இன்னும் பல மகத்தான நற்பலன்களைப் பெறலாம் என்பதுதான் ஜோதிடத்தின் சூட்சும பலன். அதனை மக்கள் புரிந்துகொண்டு, பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தில் மிக மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.
அஸ்வினி நட்சத்திரம், 27 நட்சத்திரங்களில் முதன்மையான நட்சத்திரம். ஏன் முதல் நட்சத்திரமாக அஸ்வினிக்கு இடம் கிடைத்தது, தாராபலம் என்று சொல்லக்கூடிய நட்சத்திரங்களின் பலம் என்னென்ன, ‘விதி - மதி - கதி’ என்பதை நட்சத்திரங்களைக் கொண்டு சொல்லும் முறை, பகவான் கிருஷ்ணர் ஏன் ரோகிணியில் அவதரித்தார், ரோகிணி நட்சத்திரத்தின் வடிவம் என்ன என்பதாக 27 நட்சத்திரங்கள் குறித்தும் அவற்றின் வடிவங்கள் குறித்தும் அந்த வடிவங்களை தொடர்ந்து பயன்படுத்தினால் கிடைக்கக் கூடிய பலன்கள் குறித்தும் அழகாக விளக்கியுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.
காஞ்சி மகானின் அனுஷ நட்சத்திரம், அனுஷ நட்சத்திர மகிமை, உத்திராட நட்சத்திரத்துக்கும் வில்லுக்கும் பீஷ்மருக்கும் உள்ள பந்தம் என்று 27 நட்சத்திரங்களின் குணங்கள், அந்த நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்கள், தெய்வங்களிடம் உள்ள நட்சத்திர வடிவங்கள், அனுமனுக்கு ஏன் வெற்றிலை மாலை? என்பன போன்ற பல விஷயங்களை, ஜோதிடர் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் புராணம் மூலமாகவும் இணைத்துக் கொடுத்திருக்கிற விதம் அருமை.
» ’மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிப்பயன்!’ - காஞ்சி மகான் அருளுரை
» மாசி பிரதோஷம்; புத வார பிரதோஷம்; நினைத்ததெல்லாம் கைகூடும்!
புத்தக வடிவமும் அட்டையும் உள்ளே இருக்கிற எழுத்துகளும் கவனம் ஈர்க்கின்றன. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்களென்றால், நான்கு நட்சத்திரங்களுக்கான விளக்கங்கள் நமக்குத் தேவையாகிறது. அதுமட்டுமின்றி, தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அவர்களின் நட்சத்திரங்களையும் அறிந்து உணர்ந்து கொண்டால், அந்த நட்சத்திரங்கள் நமக்கு சம்பத்து தாரைகளாக இருப்பார்களா, வதை தாரை நட்சத்திரக்காரர்களாக இருப்பார்களா என்பதையெல்லாம் எளிமையாகச் சொல்லிப் புரியவைக்கிறது இந்த நூல்.
’சுபிட்சம் தரும் நட்சத்திர வடிவ ரகசியங்கள்’ என்கிற ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் எழுதியுள்ள இந்த நூல், ஜோதிட ரகசியங்களை நமக்கு உணர்த்துகிற அற்புதமான நூல்.
நூல் : சுபிட்சம் தரும் நட்சத்திர வடிவ ரகசியங்கள்
ஆசிரியர் : ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
வெளியீடு : பிரியம் பப்ளிகேஷன்
41, பழைய முன்சீப் கோர்ட் தெரு,
நாமக்கல்.
செல்போன் : 95855 26715
நம் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில், ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் 'உங்கள் நட்சத்திரங்கள்... வரம் அருளும் தெய்வங்கள்’ எனும் தலைப்பில் 25.2.2021 வியாழக்கிழமை முதல் புதிய தொடர் எழுதுகிறார்.
இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள். இன்னும் பல விரிவான தகவல்களை, நம்முடைய நட்சத்திரங்கள் குறித்த முழுமையான விஷயங்களை அறிந்து உணரலாம்!
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago