- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
புனர்பூசம் -
சிறப்பான நன்மைகள் நடைபெறக்கூடிய வாரம்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
» அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரை)
» ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள்; பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரை
திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் ஏதும் இருக்காது, இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆரோக்கியப் பிரச்சனைகள் தீரும்.
கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.
செவ்வாய் -
ஒரு சிலருக்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
புதன் -
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வியாழன் -
நினைத்தது நிறைவேறும் நாள். சொந்த வீடு வாங்கும் முயற்சி அல்லது புதிய வாகனம் வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.தொழில் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும்.
வெள்ளி -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
சனி -
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இட மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள்.
ஞாயிறு -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முக்கியமான உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் கேளுங்கள். நன்மைகள் பெருகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும், சுப பலன்கள் நடக்கும்.
**************************
பூசம் -
நினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டு.
நீண்டநாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்புகளும் கைகூடிவரும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்குவது வியாபாரத்தை தொடங்குவது போன்றவை ஏற்படும்.
வாய்ப்புகள் சிறப்பாக இருக்கின்றன. அலுவலகப் பணிகளில் அதிக பணிச்சுமை கூடினாலும் இயல்பாகவே இருக்கும். சக ஊழியர்களுடன் இணைந்து முக்கியமான பணிகளை முடித்துக் கொடுப்பீர்கள்.
வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றத்தைக் காணலாம்.
ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம்-
திங்கள் -
எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
செவ்வாய் -
சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சிய எண்ணம் தோன்றும். கவனமாகச் செயல்பட வேண்டிய நாள்.
புதன் -
மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வியாழன் -
எதிலும் அவசரப்படக்கூடாது. நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். செலவு அதிகம் இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும்.
வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சனி -
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள் நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை இன்று எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.
ஞாயிறு -
எதிர்பாராத பண வரவு உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் இன்று நல்ல முடிவு எட்டப்படும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை தொடர்பான செய்தி மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***********************
ஆயில்யம் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
பணப்புழக்கம் சரளமாக இருக்கும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும். உற்சாகமான மனநிலைக்கு மாறுவீர்கள்.
இதுவரை தொழில் செய்யாதவர்களுக்குக் கூட இப்போது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளை விற்பதில் ஏற்பட்ட தடை தாமதங்கள் விலகி இப்போது சொத்து விற்பனையாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஒரு சிலர் சுயமாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு. ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வருமானம் கிடைக்கும்.
பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான விஷயங்கள் தாமதமாகும். குடும்பத்தில் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும் அல்லது எதிர்பார்த்ததை விட குறைவாகக் கிடைக்கும்.
செவ்வாய் -
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் தாமாகவே தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாழன் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உருவாகும். அது தொடர்பாக மருத்துவச் செலவு ஏற்படும்.
வெள்ளி -
வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவாகும். வியாபார விஷயமாக ஏற்படும் சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.
சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார இடங்களில் மாற்றங்கள் செய்ய முற்படுவீர்கள்.
ஞாயிறு -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆதிசேஷனை வழிபாடு செய்யுங்கள். பள்ளிகொண்ட பெருமாளை வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
*********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago