- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.
10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம் வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் இருந்து வந்த கசப்பு உணர்வு மாறும். ராஜாங்க ரீதியாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.
குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்து பணம் வரும்.
பெண்களுக்கு எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகை வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.
மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களைப் படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதைத் தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
பூரட்டாதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். மன நிம்மதி கிடைக்கும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதையும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளைத் திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களைச் செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
ரேவதி:
இந்த மாதம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
*****************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago