- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். சுபகாரியங்கள் சம்பந்தமான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலைச் செய்து முடிப்பீர்கள்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசாங்கம் சார்ந்த தடைகளை தகர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து வலுவான ஆதரவைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பெண்களுக்கு எந்தத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
கலைத்துறையினருக்கு தொழில் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கலாம். சக கலைஞர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குழப்பங்கள் நீங்கும். உங்களுடைய வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மகம்:
இந்த மாதம் நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மைகளைத் தரும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம்.
பூரம்:
இந்த மாதம் வெளியூர் பயணங்களால் லாபம் அடைவீர்கள். லாபத்திற்காகக் காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும்படியான விற்பனை இருக்கும். உடனிருப்பவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உத்திரம்:
இந்த மாதம் எந்தக் காரியத்திலும் கவனம் தேவை. பெரியவர்களிடம் நற்பெயர் எடுத்து மகிழ்ச்சி காண்பீர்கள். மனம் தெளிவடையும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக நடந்தேறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
******************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago