- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் கிரகநிலை சூழ்நிலையில் ஓரளவுக்கு நன்மைகளை பெறப் போகிறீர்கள். பணவரத்து கூடும். ஆன்மிகம் தொடர்பான செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்தக் காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேறத் தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைகள் உண்டாகும். புத்திசாதுர்யத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதுர்யம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றமான நிலை காணப்படும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
அரசியல் துறையினருக்கு உங்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். வாகன யோகம் உண்டாகும். சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். மேலிடத்தில் உறவு பலப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உதவி கிடைக்கும்.
புனர்பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.
பூசம்:
இந்த மாதம் உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள்.
ஆயில்யம்:
இந்த மாதம் சுவாரஸ்யமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளைக் கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
பரிகாரம்: ஸ்ரீதுர்கை அம்மனை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
*******************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago