- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
» கடன் பிரச்சினை தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்! கடனில் சிறு தொகையேனும் கொடுங்கள்
» எமதருமனுக்கு சந்நிதி; படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள்! - திருப்பைஞ்ஞீலி திருத்தல அதிசயம்
இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.
சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும்.
வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் வாக்குவன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.
உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுர்யத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மாணவர்களுக்கு புத்திசாதுர்யம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
****************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மைகள் உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும்.
பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுர்யத்தால் வேலைகளைத் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.
பெண்கள், உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.
மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவபெருமானை வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
**********************
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது
இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும்.
ராசிநாதனின் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும்.
நண்பர்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும்.
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவார்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.
பரிகாரம்: கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
***************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago