அஸ்வினி, பரணி, கார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 11 முதல் 17ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்வினி -

வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திங்கள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம் இது.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவுகள் பலப்படும். குடும்பத்தினர் உங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி நடந்து கொள்வார்கள்.

மனதில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். அதைக் கடந்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலையை செய்து முடித்து விடுவீர்கள். தரகு தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும்.

புதன்-
பொறுமை மிக மிக அவசியம். உணர்ச்சிவசப்படுதல் கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் வேண்டும். வியாபார விஷயங்களில் நிதானம் கடைபிடிக்க வேண்டும்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணம் உறுதியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய விஷயங்கள் முடிவாகும். நெருங்கிய நண்பர்கள் மூலமாக அதிகப்படியான உதவிகள் கிடைக்கும்.

சனி-
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். பணியில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும்.
*****************

பரணி -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது.

தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்துவந்த கருத்துவேறுபாடுகள், பிரச்சினைகள், பிரிவுகள் போன்றவற்றில் சமாதானம் ஏற்படும்.

சகோதரர்களால் ஏற்பட்ட ஒரு சில வருத்தங்கள் இப்போது சரியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணியில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் காணாமல் போகும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
நீண்டநாள் பிரச்சினை முடிவுக்கு வரும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

செவ்வாய்-
வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற சர்ச்சைகள் தோன்றும். பொறுமை அவசியம். நிதானமாகமாகவும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்தும் எந்தச் செயலையும் செய்ய வேண்டும்.

புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுகள் மனதிற்கு நிம்மதி தரும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாழன்-
சுபச் செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு தாராளமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும். முயற்சிகள் எதுவாக இருந்தாலும் முழுமையான வெற்றி கிடைக்கும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். குழந்தைகளின் உடல்நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் நடக்கும். சங்கடங்கள் தீரும்.
**********************

கார்த்திகை -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும் பொருளாதாரச் சிக்கல்களால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். விற்க முடியாமல் இந்த சொத்துகள் இப்போது விற்பனையாகும்.

பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். வேலை விஷயமாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். உற்பத்தியான பொருட்கள் விரைந்து விற்பனையாகும்.

ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகளும், தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். இல்லத்தில் உறவினர்கள் வருகை ஏற்படும். சகோதர வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் விலகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

புதன்-
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டுபண்ணும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வெள்ளி-
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவடையும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகிப் போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்