தனுசு ராசி அன்பர்களே!  2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; வாக்கு வன்மை கூடும்; பயணத்தில் எச்சரிக்கை; பண வரவு திருப்தி; மனக்கசப்பு நீங்கும்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

06-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

30-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

திறமையையே மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்லும் தனுசு ராசியினரே!

ஒழுக்கமாக வாழ வேண்டும் என விரும்புபவர்கள் நீங்கள். இந்த மாதம் வாக்குவன்மையால் எதையும் சாதகமாகச் செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தகத் திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்பப் பிரச்சினைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.

பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எந்த நேரத்திலும் கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.

அரசியல் துறையினருக்கு உறுதியும் துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் மனோபலத்துடன் படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

மூலம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரப் போட்டிகளில் இருந்த தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

பூராடம்:
இந்த மாதம் எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்காதீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் விருப்பமான நபரைச் சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். வீண் பேச்சுகளைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தைக் குறைப்பது நல்லது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். மனக்கஷ்டம் தீரும்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் 11 முறை வலம் வந்து வணங்கி வாருங்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணக் கஷ்டம் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்