பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்;  (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். சகல செல்வங்களையும் பெற்று உங்கள் கனவுகள் நிறைவேற முருகப் பெருமானின் அருள் நிறைந்திருக்கட்டும்.

பூரட்டாதி -

நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம் இது.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தினரின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பாராத தன லாபமும் உண்டாகும்.

எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானமாக செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வது சாதகமாக இருக்கும். புதிதாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தேவையான உதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியுடன் முக்கியமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். நீண்ட நாளாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். வீடு நிலம் தொடர்பான வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வியாபாரங்கள் பேசி முடிக்கப்படும்.

பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற ஆடம்பர நாட்டங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்க வேண்டும். கலைஞர்களுக்கு நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததற்கும் மேலாக கிடைக்கும். திடீர் தனலாபம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

புதன் -
பொறுமை, நிதானம் அவசியம். கடன் தொடர்பான பிரச்சினைகளில் அமைதியாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

வெள்ளி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

சனி-
வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பணத்தைக் கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

ஞாயிறு-
நண்பர்களாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சிகரமான செய்திகளை கிடைக்கப்பெறுவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
**************

உத்திரட்டாதி -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது.

தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதர சகோதரிகள் அனுசரித்துச் செல்வார்கள். வீடு மாற்றச் சிந்தனை உண்டாகும்.

புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய ஆலோசனைகளைச் செய்வீர்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவை நடக்கும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை பற்றிய தகவல் உறுதியாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

தந்தை வழி சொத்துக்கள் சேரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாரம் அது தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்த வாரம்-

திங்கள்-
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறக்கூடிய நாள். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும்.

புதன்-
குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாழன்-
சிறு தூர பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வெள்ளி-
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கக்கூடிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. சிறப்பான வருமானம் உண்டாகக் கூடிய நாள்.

சனி-
தேவைகள் பூர்த்தியாகக் கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். நண்பர்களால் தர்ம சங்கடங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர் சார்த்தி
வணங்குங்கள். நன்மைகள் நடக்கும்.
********************

ரேவதி -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

செய்யவேண்டிய காரியங்களை திட்டமிட்டு வகுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். திடீர் தனலாபம் உண்டாகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீக சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதரரிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார நிறுவனத்தை விரிவு செய்வது போன்றவை நடக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் உண்டு.

பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் உருவாகும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் இனி இருக்காது.

மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும். ஆதாயம் தரக்கூடிய வியாபார ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும்.

செவ்வாய் -
அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டு பண்ணும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

புதன்-
மனநிம்மதி ஏற்படும் நாள். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.


வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். மனதில் நினைத்ததை செயலில் செய்து காட்டுவீர்கள். குடும்பத்தினருடையே விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சந்திப்பு ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்