- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். சகல செல்வங்களையும் பெற்று உங்கள் கனவுகள் நிறைவேற முருகப் பெருமானின் அருள் நிறைந்திருக்கட்டும்.
திருவோணம் -
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.
» விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை)
» அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை)
குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் சமாதானம் ஏற்படும். எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்பதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய சொத்துகள் சேரும். வாகன மாற்றும் சிந்தனை ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். பணிச்சுமை அதிகரித்தாலும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
பதவி உயர்வு அல்லது இடமாற்றம் போன்றவை ஏற்படும். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். ஒரு சிலர் சிறிய அளவிலான வியாபாரம் தொடங்குவது அல்லது தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது போன்றவை நடக்கும்.
பெண்களுக்கு மன நிறைவான வாரமாக இருக்கும். செல்வச் சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். வேலையில் இருக்கும் பெண்கள் பதவி உயர்வு ஊதிய உயர்வு உள்ளிட்ட அவை கிடைக்கும்.
ஒரு சிலருக்கு சுயமாக தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் எளிதான வெற்றியைக் காணலாம்.
மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அலட்சியமாக இருக்கக்கூடாது.
கலைஞர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகும். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.
புதன்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.
வியாழன்-
பயணங்கள் ஏற்படும். அதன் காரணமாக செலவுகளும் ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீட்டு உபயோகப் பொருட்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
வெள்ளி-
குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும்.
சனி-
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும்.
ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபார ஒப்பந்தம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். திருமணத் தேதி முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீமகாவிஷ்ணு பெருமாளை வணங்குங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
*****************************
அவிட்டம் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் திடீர் பணவரவு போன்றவை உண்டாகும். குடும்ப உறவினர்களின் விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
புதிதாக நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.
புதன்-
சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.
வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி-
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். சுபவிசேஷங்கள் பற்றிய ஆலோசனைகளை செய்வீர்கள். குலதெய்வ வழிபாடு ஆலய தரிசனம் போன்றவை ஏற்படும்.
சனி-
தொலைபேசி வழித் தகவல் மனநிறைவைத் தரும். நீண்ட நாளாக முடியாமல் இருந்த வியாபார விஷயங்கள் இன்று சுமுகமாக முடிவடையும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். அடகு நகைகளை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
ஞாயிறு-
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. முக்கியமான சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். செலவுகளைச் சிக்கனமாக செய்யுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள். அதிக நன்மைகள் நடக்கும்.
*************************
சதயம் -
நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீடு வாங்குவது அல்லது சொத்துகள் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் வந்து போகும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.
தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும்.
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் ஒப்பந்தங்களாக மாறும்.
இந்த வாரம் -
திங்கள்-
பணவரவு தாராளமாக இருக்கும்.குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.
புதன்-
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
வியாழன்-
செலவுகள் அதிகமாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் வந்துபோகும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.
வெள்ளி-
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்பு தெரியாது. குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக் கூடிய நாளாக இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.
சனி-
அலுவலகப் பணி காரணமாக அல்லது வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தருவதாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும்..
ஞாயிறு-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தருவார்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாசக்தி மாரியம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
*********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago