- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...! மன மகிழ்ச்சியும், மன அமைதியும் ஆண்டுமுழுவதும் நீடித்திருக்க முருகப்பெருமானை வேண்டுகிறேன்.
விசாகம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் சாதகமான முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
» அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை)
» மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை)
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சில சர்ச்சைக்கு உரிய விஷயங்களைப் பேசாமல் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
வீடு மாற்றம் வாகன மாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுவரை நல்ல வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்துகள் தொடர்பான விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காண முடியும்.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் பெருமளவு நன்மைகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். உயர்கல்வி கற்பதற்கான வங்கிக் கடன் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
சிறப்பான வருமானம் கிடைக்கக்கூடிய நாள். தரகு அல்லது கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நீண்ட நாளாக வராமலிருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
புதன்-
அலைச்சல்களும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.
வியாழன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்க வழி கிடைக்கும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
வெள்ளி-
மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.
சனி-
ஆதாயம் தரக்கூடிய வருமான வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது பற்றிய முன்னேற்றமான தகவல் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்
ஞாயிறு-
பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தரக் கூடிய வாய்ப்பு உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் நடக்கும். அதனால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும், செலவுகள் குறையும்.
***************
அனுஷம் -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும் வாரம்.
கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட நாளாக இருக்க முடியாமல் இருந்த ஒரு சில பிரச்சினைகளை இந்த வாரம் தீர்வதற்கு வாய்ப்பு உள்ளது, சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரச்சினைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு தொழில்முறை நண்பர்கள் மூலமாக முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகளும் ஒரு சிலருக்குக் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.
செவ்வாய்-
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். கையாளும் பொருட்களில் கவனமாக இருக்கவேண்டும். செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதன்-
எதிர்பாராத வருமானம் கிடைக்கக்கூடிய நாள். கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் நிலை ஏற்படும்.
வியாழன்-
தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சற்று அழுத்தம் அதிகரித்தாலும் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களோடு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஞாயிறு-
எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படித்து வாருங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தடைகள் அகலும்.
***************
கேட்டை -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
குடும்பப் பிரச்சிசனைகள் முடிவுக்கு வரும். குறிப்பாக கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தடைப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்போது கிடைக்கும். சகோதர சகோதரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
ஒன்றுமில்லாத பிரச்சினையை பெரிதாகப் பேசி பிரச்சினையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக முதலீடுகளைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
பெண்களுக்கு தொழில், வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
இந்த வாரம் -
திங்கள்-
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.
செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
புதன்-
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சுபகாரிய விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாழன்-
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். சுபச்செலவுகள் ஏற்பட கூடிய நாளாகவும் இருக்கிறது. மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.
வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆலய தரிசனம் கிடைக்கும். மன நிம்மதியும் நிறைவும் உண்டாகும்.
சனி-
அலுவலக வேலைகளில் இருந்த மந்த நிலை மாறி, எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான நபர்களைச் சந்திப்பதற்கான அனுமதி தொடர்பான தகவல் உறுதியாகும்.
ஞாயிறு-
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழியுங்கள். நண்பர்களோடு வெளியே செல்ல வேண்டாம். அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
சிவ வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிக அளவில் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
*****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago