புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களுடைய நல்ல எண்ணங்கள் முருகப்பெருமான் அருளால் நிறைவேறட்டும்.

புனர்பூசம் -

அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம்.

எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியே உதவிகள் கிடைக்கும்.

அலுவலகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் படிப்படியாக விலகி, தொழில் மீண்டும் முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.

சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும்படியான சுபகாரிய விசேஷங்கள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணக் கூடிய நாள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாகத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் -
பராமரிப்புச் செலவுகள் ஏற்படும் நாள். அலுவலகப் பணிகளில் மற்றவர்கள் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தாமதமாகும். வளர்ச்சி சீராக இருக்கும்.

புதன் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். வியாபார விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

வியாழன் -
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பேசுகின்ற வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி -
குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான சந்திப்புகள் ஒப்பந்தங்கள் ஏற்படக் கூடிய அளவிற்கு இருக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த தகவல் தாமதமாகும். கடன் சம்பந்தப்பட்ட விஷயம் கவலை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு -
ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். சுபவிசேஷங்கள் முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சீதா ராமரை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********************

பூசம் -

நல்ல பலன்கள் நடைபெறும் வாரமாக இருக்கும்.

உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்புகளும் உண்டு.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு வேலைக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். புதிய வியாபார நிறுவனங்கள் ஆரம்பிக்கும் வாய்ப்பும் உண்டு.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். எதிர்பார்த்த தொழில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கடிகள் அகன்று ஆதாயம் பெருகும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் மன மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாளாக இருக்கும்.

செவ்வாய் -
அதிக அளவு நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

புதன் -
வீண் செலவுகள் ஏற்படும். வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் அதிக அழுத்தம் ஏற்படும். உயர் அதிகாரியிடம் மனவருத்தம் ஏற்படும்.

வியாழன் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

வெள்ளி -
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

சனி-
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

ஞாயிறு -
தொலைதூரப் பயணங்கள் செய்ய வேண்டாம். பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். ஒப்பந்தங்கள் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். குரு பாமாலை கேட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***********************

ஆயில்யம் -

எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும் வாரம்.

குடும்ப உறவுகள் பலப்படும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத்தரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

வியாபார நிறுவனத்தை இடமாற்றம் செய்யும் வாய்ப்பும் உண்டு.

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் அமைதியாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

புதன் -
மனம் மகிழ்ச்சி தரும்படியான செய்திகள் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வியாழன்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு. எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும்.

வெள்ளி -
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பாக பணவரவு உண்டாகும். நண்பர்கள் மூலம் ஆதாயங்கள் உண்டாகும்.

சனி-
தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடுதலாக இருக்கும். எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் தள்ளிப் போகும்.

ஞாயிறு -
நண்பர்களால் ஆதாயம் அடையும் நாள். முக்கியமான நண்பர் ஒருவரால் வியாபாரம் தொடர்பான லாபம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீதுர்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்