அஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -

வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களுடைய நல்ல எண்ணங்கள் முருகப் பெருமான் அருளால் நிறைவேறப் பிரார்த்திக்கிறேன்.

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒற்றுமை நீடிக்கும். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிகள் தேவையான உதவிகளைச் செய்து தரக் கூடிய அளவில் இருப்பார்கள். மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.

இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள் மனமகிழ்ச்சி அடையக்கூடிய வாரமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
வருமானம் இருமடங்காகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியை தரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

புதன் -
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் நிதானத்தோடு பணியாற்றவேண்டும். தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் எளிதாக நடந்தேறும். அலுவலகப் பணிகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி -
குடும்பத்தினரோடு குதூகலமாக இருப்பீர்கள். மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. உறவினர்கள் வருகை, நண்பர்கள் சந்திப்பு போன்றவை ஏற்படும். செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்பு தெரியாது.

சனி-
தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தாமதப்பட்டு வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
அலைச்சல்கள் அதிகமாகும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். முக்கிய சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவிஷ்ணு துர்கை அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*********************

பரணி -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம் இது.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களால் தேவையான உதவிகளும் கிடைக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். தாய்வழி உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும். சுமுகமான உறவு தொடரும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது.

ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் லாபமும் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். தங்கள் வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள். பெண்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது முடிவாகும்.

திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக் கொண்ட காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான நிலை இருக்கும், வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இல்லத்திற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய் -
எதிர்பாராத பணவரவு இருக்கும் நாள். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

வியாழன் -
செலவுகள் அதிகமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி-
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும் நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய அத்தியாவசிய பொருள் ஒன்றை வீட்டுக்கு வாங்குவீர்கள்.

சனி-
நிதானம் தேவை. குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டக் கூடாது. பொறுமை மிக மிக அவசியம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சிக்கன நடவடிக்கை தேவை.

ஞாயிறு -
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆலோசனை செய்வீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
******************

கார்த்திகை -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். குடும்பம் தொடர்பான விஷயங்கள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

தொழில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி இயல்பு நிலைக்கு படிப்படியாக வருவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

போட்டி நிறுவனங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். ஆதாயம் தரக்கூடிய உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். எந்த வாய்ப்பையும் தவற விடவேண்டாம். சிறிய அளவிலான வியாபாரமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதிக லாபம் கிடைப்பது உறுதி.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். கல்வி தொடர்பான உபகரணங்களை வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு புதிய நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வியாபார நிமித்தமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

செவ்வாய் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். அலுவலகத்தில் இயல்பான நிலை தொடர்ந்தாலும், ஒரு சிலருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

புதன் -
அலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும்.

வெள்ளி -
மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. அதேசமயம் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியாது. கையிருப்பு கரையும் அளவுக்கு செலவுகள் ஏற்படும். மாலை நேரத்தில் நல்ல தகவல் ஒன்று கிடைக்கும்.


சனி-
இல்லத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். புதிய அத்தியாவசியமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. ஆதாயம் ஏற்படும் வியாபார ஒப்பந்தம் பேசி முடிக்கப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும்.

ஞாயிறு -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்கள் தேவையான உதவி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அன்னையை வழிபடுங்கள். அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு புற்றுக் கோயில்க்குச் சென்று வழிபடுங்கள். அன்னைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்