மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்;  டிசம்பர் 24  முதல் டிசம்பர் 30ம் தேதி வரை

By செய்திப்பிரிவு


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் கேது - விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய ராசிக்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மனக் குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம்.
தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும்., சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்கப்பெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலை தூக்கும். எனவே சாதுர்யமாகப் பேசி எதையும் சமாளிப்பது நல்லது.

பொதுவான காரியங்களில் ஈடுபடும்போது கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மன வலிமை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது நல்லது..

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
திசைகள்: தெற்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஆஞ்சநேய கவசம் சொல்லி வழிபட்டு வாருங்கள். தொல்லைகள் நீங்கும். நன்மைகள் உண்டாகும்.
***************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - விரய ஸ்தானத்தில் குரு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய விரய ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

எதிர்த்து செயல்பட்டவர்கள் இந்த வாரம் ஒதுங்கி விடுவார்கள். நீண்டநாள் கஷ்டங்கள் நீங்கும்.

மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்திக் கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை.

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு: கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை
எண்கள்: 6, 9
பரிகாரம்: பைரவரை வணங்கி வாருங்கள். கடன் பிரச்சினை தீரும். மன அமைதி உண்டாகும்.
***********************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய லாப ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும் அந்தஸ்தும் உயரும்.

பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். பயணங்கள் ஏற்படலாம். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும்போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளித் தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.
பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டுச் செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சுந்தரகாண்டம் படித்து பெருமாளை வணங்கி வாருங்கள். சகல நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்