சனிப்பெயர்ச்சி பலன்கள் ; சித்திரை நட்சத்திர அன்பர்களே! தைரியம் கூடும்; நண்பர்களால் உதவி; பணிச்சுமை குறையும்; காரியத்தடைகள் நீங்கும்!

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சித்திரை:

சனி பகவான் உங்களின் எட்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் தைரியமானவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.
கலைத்துறையினர் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எல்லாச் செயல்களும் திருப்திகரமாக நடைபெறும். சாதுர்யமான பேச்சின் மூலம் பிரச்சினைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: தினமும் கந்த குரு கவசம் சொல்லி முருகப் பெருமானை வழிபடுவதால் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வராஹி தேவியை வழிபடுங்கள். வளமும் நலமும் பெறுவீர்கள். எதிர்ப்புகளில் இருந்து விடுபடுவீர்கள்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்