- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூசம்:
சனி பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சந்திரன் - சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் உழைத்து வாழ்வில் முன்னேறுபவர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியில் மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாகச் செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்துச் செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு, உடல் நல பாதிப்பு முதலானவை ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
கலைத்துறையினர் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையைத் தரும்.
அரசியல்வாதிகளுக்கு பிற கட்சிகளில் உள்ளவர்களை இகழ்ந்தும் கேலியும் செய்யக்கூடாது. அதனால் வீணான வழக்குகள் உங்கள் மேல் வரலாம்.
பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். மன அமைதி உண்டாகும். குபேர வழிபாடு செய்யுங்கள். காரிய அனுகூலம் ஏற்படும்.
*****************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
27 mins ago
ஜோதிடம்
32 mins ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago