உங்கள் நட்சத்திரங்களின் வடிவங்கள்; பயன்படுத்தினால் எதிலும் வெற்றி; எப்போதும் வெற்றி!  27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 98 : 

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

நட்சத்திர தகவல்கள் இதுவரை பல தரப்பட்டவிஷயங்களைத் தந்துள்ளேன். குறிப்பாக தாராபலம் என்னும் உங்களுடைய நட்சத்திரத்திற்கு நன்மைகள் தரக் கூடிய நட்சத்திரங்கள், தீமைகளை தரக் கூடிய நட்சத்திரங்கள் என முழுமையான பட்டியலையும் பார்த்திருப்பீர்கள்.

இன்னும் பல தகவல்களை இந்த அத்தியாயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வடிவங்கள் அதாவது உருவங்கள் இருக்கின்றன. இதை ஒவ்வொரு நட்சத்திர விளக்கத்திலும் பார்த்தோம்! ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

முதலில் நட்சத்திரங்களுக்கான வடிவங்களை பார்ப்போம்..

அஸ்வினி - குதிரை முகம்

பரணி - முக்கோணம், அடுப்பு

கார்த்திகை - கத்தி, குறிப்பாக சவரக்கத்தி, நெருப்பு ஜ்வாலை

ரோகிணி - தேர், வண்டி

மிருகசீரிடம் - மான் தலை, தேங்காயின் மூன்று கண்

திருவாதிரை - மனித தலை, வைரம், கண்ணீர் துளி

புனர்பூசம் - வில்

பூசம் - அம்புக்கூடு, அம்பாரம், பசுவின் மடி

ஆயில்யம் - சர்ப்பம், அம்மிக்கல்

மகம் - பல்லக்கு, நுகத்தடி

பூரம் - கட்டில் - சதுர வடிவம்

உத்திரம் - கட்டில் கால்

அஸ்தம் - உள்ளங்கை

சித்திரை - முத்து, புலியின் கண்

சுவாதி - தேன்கூடு, தீபம்

விசாகம் - முறம், குயவர் சக்கரம்

அனுஷம் - குடை, தாமரை

கேட்டை - ஈட்டி, குண்டலம்

மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை

பூராடம் - கட்டில் வடிவம்

உத்திராடம் - கட்டில் வடிவம்

திருவோணம் - மூன்று பாதச்சுவடுகள், முழக்கோல்

அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை

சதயம் - பூங்கொத்து

பூரட்டாதி - கட்டில்கால்

உத்திரட்டாதி - கட்டில்கால்

ரேவதி - மீன், படகு

இந்த நட்சத்திர வடிவங்களை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் நட்சத்திரத்திற்கான வடிவத்தையும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர வடிவத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தையும், எளிதான வெற்றியையும், சமூகத்தில் செல்வாக்கையும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையையும் தரும்.

ஒருசில எளிமையான உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பிறந்தது ரோகிணி நட்சத்திரம். இந்த ரோகிணி நட்சத்திரத்தின் வடிவம் தேர், கிருஷ்ணர் தன் அவதாரத்தின் நோக்கத்தை முடித்து வைத்தது தேரோட்டியாக இருந்து தேர் செலுத்தி பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடி தந்தார், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ரோகிணியில் பிறந்த கண்ணன் தேரோட்டியாக இருந்ததற்கு காரணம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும்.

ஸ்ரீராமபிரான் பிறந்தது புனர்பூச நட்சத்திரம். புனர்பூசம் உருவம் வில் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். வில்லேந்தி ராவணனை வென்றது முதல், பட்டாபிஷேகத்தில் கூட வில்லோடு தான் அவர் காட்சியளித்தார். ஜென்ம நட்சத்திரத்தின் உருவத்தை அவர் கை விடவே இல்லை. இதுவும் ஒரு சிறந்த உதாரணம்.

வாமன அவதாரத்தில் வாமனர் மூன்றடி மண் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியுடன் நடத்திய தசாவதார காட்சிகள் நாம் அறிந்ததே! அந்த வாமனர் பிறந்தது திருவோண நட்சத்திரம். அந்த திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள்.இதுவும் ஒரு எளிய உதாரணம்!

அனுமன் பிறந்தது மூல நட்சத்திரம். அனுமனின் ஆயுதமாக கையில் வைத்திருந்தது அங்குசம் என்னும் மூல நட்சத்திரத்தின் வடிவத்தைத்தான்.

இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் முழு விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ளமுடியும். உணர்ந்து தெளியமுடியும். எனவே, உங்கள் நட்சத்திரத்திற்கு தரப்பட்டிருக்கும் வடிவத்தை நீங்கள் பயன்படுத்தினால் வெற்றி மேல் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த நட்சத்திரப் பட்டியலில் உத்திரம், பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம் இந்த நான்கு நட்சத்திரங்களுக்கும் கட்டில் வடிவம் என்றும், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி கட்டில்கால் என்றும் இருக்கிறது.

இதை எப்படிப்யன்படுத்துவது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

கட்டிலில் படுத்து உறங்கினால் போதுமா என்ற கேள்வி எழும். உண்மைதான். கட்டிலில் படுத்து உறங்குவது மட்டும் போதாதுதான். அதேசமயம், எந்த ஒரு திருமணத்திற்கும் அன்பளிப்பாக கட்டிலை பரிசாகக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

கட்டில் கால்களை எப்படி பயன்படுத்துவது? இதுவும் ஒரு நியாயமான கேள்வியே! நீங்கள் உட்காரப் பயன்படுத்தும் நாற்காலிகள், ரோலிங் சேர் அல்லது சொகுசு நாற்காலிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் நான்கு கால்களைக் கொண்ட நாற்காலிகளைப் பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள், குதிரை படத்தை தங்கள் கண்களில் படும்படி மாட்டி வைப்பதும், அல்லது குதிரை உருவ பொம்மைகளை பயன்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கோண வடிவத்தில் உள்ள எந்தப் பொருளையும் உபயோகப் படுத்தலாம். அல்லது மண்ணால் செய்யப்பட்ட அடுப்பை வீட்டில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தீ ஜுவாலை போன்ற வடிவத்தைப் பயன்படுத்தலாம்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தேர் படங்களை கண்ணில் படும்படியாக வைத்துக் கொள்ளலாம். அல்லது தேர் பொம்மைகளை பயன்படுத்தலாம்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் மான் படங்கள் மற்றும் மான் வடிவச் சிலைகளை, பொம்மைகளைப் பயன்படுத்தலாம்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மனித ஓவியங்கள், நடராஜர் படங்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வில் அம்பு வடிவங்களை, படங்களை பயன்படுத்தலாம்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் பசுவின் படத்தை வைத்துக் கொள்ளலாம்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் சர்ப்ப வழிபாடு செய்யலாம், மற்றும் சமையல் அறையில் சிறிய அம்மிகளைப் பயன்படுத்தலாம்.

மகம் நட்சத்திரக்காரர்கள் பல்லக்கு உருவம் கொண்ட படங்களை பயன்படுத்தலாம்.

பூரம் நட்சத்திரக்காரர்கள் மணைப் பலகை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மணைப் பலகை பயன்படுத்தலாம்.மேலும் திருமண தம்பதியினருக்கு மெத்தை பரிசளிக்கலாம்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு செலவே இல்லாத வழி...! காலையில் கண் விழித்ததும் தங்கள் உள்ளங்கையை பார்த்து வந்தாலே போதும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் முத்து மாலையைப் பயன்படுத்தலாம். புலியின் படங்களைப் பயன்படுத்தலாம்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் தினமும் தீபம் ஏற்றி அந்த தீபத்தை சில நிமிடங்கள் உற்று நோக்கி தரிசித்தாலே போதுமானது.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் முறம் பயன்படுத்துவதும், குயவர் சக்கரம் போன்ற சக்கர வடிவங்களை வீட்டில் வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் குடைகளை பயன்படுத்துவதும் தாமரை மலர்களை வீட்டில் வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் குடைகளை பயன்படுத்துவதும், ஈட்டி வேல் போன்ற வடிவங்களை வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும்.

மூலம் நட்சத்திரகாரர்கள் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு செய்தாலே போதும்.

பூராடம் - உத்திராடம் - இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களும் திருமண பரிசாக கட்டில்களை பரிசளிப்பதும் கட்டில்களை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வில் அம்பு கூடிய படங்களை பயன்படுத்துவதும் அந்த உருவங்களை வைத்துக்கொள்வதும் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பாதச்சுவடுகளை படமாக வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கொலுவில் பயன்படுத்தும் சிறிய அளவிலான மிருதங்கம் பொம்மைகளை வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

சதயம் நட்சத்திரக்காரர்கள் பூங்கொத்து வைத்துக்கொள்வது நல்ல பலன்களை தரும். இங்கே பூங்கொத்து என்பது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு ஐந்து ஆறு மலர்களை ஒன்றாக சேர்த்து வைத்துக் கொண்டாலே போதும்.

பூரட்டாதி - உத்திரட்டாதி - இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களும் தாங்கள் உட்காரும் நாற்காலிகளை மர நாற்காலிகளாக அதாவது, நான்கு கால்களைக் கொண்ட நாற்காலிகளாக பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்களை வளர்ப்பது, படகு ஓவியங்களை வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும்.

அன்பார்ந்த வாசகர்களே,

உங்கள் நட்சத்திர உருவங்களை பயன்படுத்துவதும், உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரத்தின் வடிவங்களையும் சேர்த்து பயன்படுத்துவதும் மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்கு நிச்சயமாக தரும் என்பது ஜோதிட சாஸ்திர விதி.

அடுத்த பதிவில் மேலும் தகவல்களுடன் சந்திக்கிறேன்.

- வளரும்
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்