சித்திரை, சுவாதி, விசாகம் ; சம்பத்து தாரை,  க்ஷேம தாரை, சாதக தாரை, வதை தாரை; 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 93 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி, விசாகம். இந்த நட்சத்திரங்களுக்கான தாராபலம் என்னும் தாரை பட்டியலைப் பார்ப்போம்.

மீண்டும் ஒருமுறை நினைவூட்டல் செய்கிறேன். 87- வது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பார்த்து விடுங்கள். அல்லது பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த விளக்கம் முழுமையாக உங்களுக்குப் புரிய வரும்.

சித்திரை நட்சத்திரம்

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -

சித்திரை - அவிட்டம் - மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும். அனைத்து சுப விஷயங்களும், சுப காரியங்களும் செய்யலாம். ஆனால், ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது. சுப காரியங்கள் செய்யலாம்.


சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
சுவாதி - சதயம்- திருவாதிரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் சிந்தாமல் சிதறாமல் முழுமையான வெற்றியை தரக்கூடியது. திடீர் பணவரவு, மிகப்பெரிய ஆதாயங்கள், தொழில் வியாபாரம் தொடங்குவது, வாழ்க்கைத்துணை, நண்பர்கள் அமைவது என அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும். வெற்றியைத் தவிர வேறு எந்தத் தடையும் தாமதமும் இருக்காது.


க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் வாங்குவதற்கும் அல்லது விற்பனை செய்வதற்கும் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். சொத்துகள் விற்பதாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான லாபம் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவது, பயணங்கள் மேற்கொள்வது என அனைத்தும் சிறப்பாக இருக்கும்.


சாதக தாரை நட்சத்திரங்கள் -

மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியங்களும் உங்களுக்கு முழுமையான நற்பலன்களை கொடுக்கக்கூடியதாக இருக்கும். வேலைக்கு மனு செய்வது, தொழில் தொடர்பான கடன் பெறுவது, வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவது என அனைத்தும் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ர தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் பயனுள்ளதாகவும், மனமகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டில் வேலை தேடுவது போன்றவை செய்யவும் தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை மேற்கொள்ளவும் ஏற்றதாகும். இரட்டிப்பு லாபம் கிடைக்க வேண்டுமானால் இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொண்டால் மிகப்பெரிய லாபத்தை அடையமுடியும்.


அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

அஸ்தம், திருவோணம், ரோகிணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிமைத்ர தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயமும் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். அயல்நாட்டுப் பயணங்கள், அயல்நாடுகளில் தொழில் மற்றும் வியாபாரம் தொடங்குவது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்குவது, வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளவும். ஆன்மிகப் பெரியோர்களை தரிசனம் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -

விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்குக் கடுமையான பாதிப்புகளை தரக்கூடியதாகவும், பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். பயணங்கள் செய்யக்கூடாது. கடன் வாங்கக்கூடாது. வழக்கு தொடுக்கக் கூடாது, பொதுப் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது.


பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -

கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பித்தளை நட்சத்திரங்களாகும் இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு எந்த வகையிலும் ஆதாயத்தைத் தராது. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சக் கூடியதாக இருக்கும்.

வதை தாரை நட்சத்திரங்கள் -

பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களுக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். கடன் வாங்குவது கூடவே கூடாது. இந்த நாட்களில் யாருக்கும் ஜாமீன் தரக்கூடாது. புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.
****************
சுவாதி நட்சத்திரம்

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -

சுவாதி, சதயம், திருவாதிரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -

விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உங்களுக்கு முழுமையான நற்பலன்கள் நடக்கும்.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள்
கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உங்களுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

சாதக தாரை நட்சத்திரங்கள் -

பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் மிக எளிதாக கிடைக்கும்.

மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

அஸ்தம், திருவோணம், ரோகிணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ர தாரை ஆகும். லாபம் தரக்கூடிய நட்சத்திரங்கள் ஆகும்.

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ர தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் அதிகப்படியான நன்மைகளை தரக் கூடியதாக இருக்கும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -

அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள் ஆகும். பயணங்கள் மேற்கொள்ள கூடாது. கடன் வாங்கக்கூடாது.

பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -

மகம், மூலம், அஸ்வினி -
இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்களாகும். உங்களால் மற்றவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் கிடைக்காது.


வதை தாரை நட்சத்திரங்கள் -

உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பும். கடும் வேதனைகளைச் சந்திக்க வேண்டியது வரும்.
************************-
விசாகம் நட்சத்திரம்

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -

விசாகம், பூராட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -

அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். முழுமையான வெற்றி கிடைக்கும். பலவித யோகங்களைத் தரும்.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -

மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். பலவித நன்மைகள் நடக்கும். ஆதாயம் பெருகும்.

சாதக தாரை நட்சத்திரங்கள் -

உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள் ஆகும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் முழுமையான நன்மைகளை தரக் கூடியதாக இருக்கும், பலவித ஆதாயங்கள் உண்டாகும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ர தாரை நட்சத்திரங்களாகும். இரட்டிப்பு லாபம், பயணங்களால் ஆதாயம் போன்றவை கிடைக்கும்.

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

சுவாதி, சதயம், திருவாதிரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ர தாரை நட்சத்திரங்களாகும். அதிகப்படியான நன்மைகளும் யோகங்களும் கிடைக்கும்.

விபத்து தாரை நட்சத்திரங்கள் -

அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திர நாட்களில், பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது, கடன் வாங்கக்கூடாது. புதிய காரியங்கள் தொடங்கக் கூடாது.

பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -

மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியேக தாரை அதாவது பிறருக்கு நன்மை. ஆனால், உங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத நட்சத்திரங்களாகும்.

வதை தாரை நட்சத்திரங்கள் -

உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை என்னும் கடும் துயரத்தைத் தரக்கூடிய நட்சத்திரங்களாகும். எந்த ஒரு காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி கடுமையான மன வேதனையை தரக்கூடியதாக இருக்கும்.

அன்பார்ந்த வாசகர்களே.

அடுத்த பதிவில் அனுஷம், கேட்டை, மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்குமான தாரா பல நட்சத்திரப் பட்டியலைப் பார்ப்போம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

- வளரும்
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்