அவிட்டம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; நன்மைகள் நடக்கும்; உதவிகள் செய்வீர்கள்; திடீர் மனஸ்தாபம்; அமைதியாக இருங்கள்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அவிட்டம்:

குரு பகவான் உங்களின் இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியில் எல்லா வகையிலும் நன்மைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கப்பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது.

சுபச் செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளைச் செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கித் தருவீர்கள்.

பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது.கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம்.

மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது அவசியம். அரசியல்துறையினர் வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: சித்தர்கள் வழிபாடு செய்யுங்கள். மனம் ஒரு நிலைப்படும்.

மதிப்பெண்கள்: 63% நல்லபலன்கள் ஏற்படும்.

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE