- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கேட்டை:
குரு பகவான் உங்களின் நான்காவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதைச் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த குருப் பெயர்ச்சி காலத்தில், பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்.
எந்தக் காரியத்தையும் கடின பிரயாசைக்குப் பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.
பெண்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: ஹயக்ரீவர் வழிபாடு லாபமும் மனத் தெளிவும் தரும்.
மதிப்பெண்கள்: 69% நல்லபலன்கள் ஏற்படும்.
***********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
42 mins ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago