சுவாதி நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; தேவையான உதவிகள்; கூடுதலான உழைப்பு; வீண் செலவு; ஆரோக்கிய பாதிப்பு! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சுவாதி:

குரு பகவான் உங்களின் ஏழாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

யானையை பூனையாக்குவதும், பூனையை யானையாக்குவதும் என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதைப் பெரியதாகவும், பெரியதைச் சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி குறையலாம்.

நிதானமாகப் பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு நன்மைகளைத் தரும்.

மதிப்பெண்கள்: 67% நல்லபலன்கள் ஏற்படும்.

*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE