திருவாதிரை  நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்;  காரியத்தடை ஏற்படும்; தொழிலில் முன்னேற்றம்; குழப்பம் தீரும்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

திருவாதிரை:

குரு பகவான் உங்களின் பதினாறாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சிக்கனம் வீட்டைக் காக்கும் சேமிப்பு நாட்டைக் காக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப சிக்கனமாக இருக்க முயலும் திருவாதிரை நட்சத்திர பிறந்த அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சியில் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம்.

அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

அரசியல்துறையினருக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை மனதில் வாங்கிப் படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரியத் தடை, மனக்குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீநடராஜரை வழிபடுங்கள். குழப்பங்கள் தீரும்.

மதிப்பெண்கள்: 61% நல்லபலன்கள் ஏற்படும்.

*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்