மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்;  தடை தாமதம்;  குழப்பம் நீங்கும்; லாபம் குறையும்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிருகசீரிஷம்:

குரு பகவான் உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

வாழ்க்கையில் சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வெற்றி நடைபோடும் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே.

காரியத் தடை தாமதம் ஏற்படலாம். கவனமாகச் செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாகப் பாதுகாத்துக் கொள்வது நல்லது.

ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நன்மைதரும்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும். குடும்பத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பெண்கள் எந்த ஒரு சிக்கலானப் பிரச்சினைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது.

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும்.

மதிப்பெண்கள்: 73% நல்லபலன்கள் ஏற்படும்.
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 mins ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்