- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அஸ்வினி:
குரு பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவுக்கு நடந்து கொள்வீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் மனக்கவலைகள் குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
வீண்பழிகள் அனைத்தும் நீங்கும். சில்லறைச் சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் சமாளித்து வருவீர்கள். மேலும் வேலைப் பளு குறையத் தொடங்கும்.
குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். கலைத்துறையினர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பணவரவு திருப்தி தரும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு நன்மைகளை அள்ளித் தரும்.
மதிப்பெண்கள்: 65% நல்லபலன்கள் ஏற்படும்.
********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago