குரு பகவான் பயோடேட்டா; குரு பகவான் காயத்ரி! 

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

குரு பகவான் பயோடேட்டா; குரு பகவான் காயத்ரி!

குருபகவான் நம் வாழ்வில் சகல சம்பத்துகளையும் அருளக்கூடியவர். தேவகுரு பிரகஸ்பதிதான் நவக்கிரக குருவாக, குரு பகவானாகத் திகழ்கிறார். குருபகவானை மனதாரப் பிரார்த்தனை செய்தால், மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் ஈடேற்றிக் கொடுப்பார்.

குரு பகவானைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம்.

சொந்த வீடு - தனுசு, மீனம்

உச்சராசி - கடகம்

நீச்சராசி - மகரம்

திசை - வடக்கு

அதிதேவதை - பிரம்மா

நிறம் - மஞ்சள்

வாகனம் - யானை

தானியம் - கொண்டைக்கடலை

மலர் - வெண்முல்லை

வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை

ரத்தினம் - புஷ்பராகம்

நிவேதனம் - கடலைப்பொடி சாதம்

உலோகம் - தங்கம்

இனம் - ஆண்

உறுப்பு - தசை

நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்

பகைகிரகம் - புதன், சுக்கிரன்

மனைவி - தாரை

பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்

பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), தென்குடித் திட்டை, திருச்செந்தூர்

தகுதி -தேவகுரு

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு காயத்ரியை தினமும் சொல்லுங்கள். குரு பலம் பெறுவீர்கள். குரு யோகத்தைப் பெறுவீர்கள்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE