- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
கருணையும் அன்பும் கொண்ட கடக ராசி வாசகர்களே.
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தர இருக்கிறது என்று பார்ப்போம்.
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த குரு பகவான் தற்போது ஏழாம் இடம் சென்று உங்கள் ராசியை ஏழாம் பார்வையாக பார்க்க இருக்கிறார்.
6-ஆம் இடத்தில் குரு இருந்தவரை ஒரு சில கடன் பிரச்சினைகள், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள், அலுவலகப் பணிகளில் ஒரு சில இடர்பாடுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் என இருந்திருக்கும்.
தற்போது குரு பகவான் ஏழாம் இடத்திற்குச் சென்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். இனி எடுத்துக் கொண்ட முயற்சிகள் மட்டுமல்லாமல், எப்போதோ எடுத்த முயற்சிகள் கூட இப்போது வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். மிக முக்கியமாக இதுவரை தொழில் தொடங்கும் எண்ணம் இல்லாதவர்களுக்குக் கூட இப்போது சொந்தமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் நடந்தேறும். பாதியில் நின்ற வீடு மற்றும் கட்டிடப் பணிகள் இப்போது முழுமையாக நடக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். கடன் முற்றிலுமாக தீரக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் காணாமல்போகும். எதற்காக மருத்துவரைப் பார்த்தோம்? எதற்காக மருந்து சாப்பிட்டோம்? என்றே நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நோய்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
தாமதப்பட்டுக் கொண்டிருந்த முயற்சிகள் அனைத்தும் இனி எளிதாக நடந்தேறும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை இப்போது கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள், புதிய பதவிகள், உயர் பதவிகள் உங்களுக்குக் கிடைக்கும்.
தொழில் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பும் வெகு சிறப்பாக இருக்கும். அடிக்கடி பழுதாகிக் கொண்டிருந்த இயந்திரங்கள் இனி சிறப்பாகவே செயல்படும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் மட்டுமல்லாமல், படிப்படியாக கிளைகளைத் தொடங்குவது, ஊழியர்களை அதிகப்படுத்துவது போன்றவை நடக்கும். சிறிய அளவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கக் கூடிய வியாபாரிகள் மிகப்பெரிய வியாபாரிகளாக மாறுவதும், சில்லறை விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரிகள் மொத்த வியாபாரிகளாக மாறுவதும் நடக்கும்.
ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு இனி பரபரப்பாகச் செயல்பட்டு வருமானத்தைப் பார்ப்பார்கள். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் இனி தடையில்லாத வருமானம் கிடைக்கும். அசைவ உணவுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது.
எந்த வாய்ப்புகள் வந்தாலும் இப்போது முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இனி அனைத்திலும் உங்களுக்கு வெற்றியும் லாபமும் கிடைக்கப் போகிறது என்பதை உணருங்கள்.
ஆரோக்கிய பாதிப்புகள் எதுவும் இருக்காது என்றாலும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அவ்வப்போது சமைத்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். இதை மட்டும் சரிவரச் செய்தால் இந்த குருப்பெயர்ச்சிக் காலம் உங்களுக்கு மிக அதிகப்படியான நன்மைகளையும், யோகங்களையும் தரும். குருபகவான் பலவிதமான யோகங்களைத் தந்தருள்வார்.
அரசியலில் இருப்பவர்களுக்கு எந்த முயற்சியும் இல்லாமலேயே பதவிகள் தேடிவரும். உங்களுடைய மதிப்பு மரியாதை உயரும். நீங்களே எதிர்பாராத மிகப் பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும் என்பது நிச்சயம். அதேசமயம் புதிய, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து விலகியே இருங்கள். அவர்கள் அரசியல் லாபத்திற்காக உங்களை கைகாட்டி விடக்கூடிய அபாயம் உள்ளது. எனவே அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருந்தாலே போதும். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கு மனம் மகிழும் நிகழ்வுகள் நடக்கும். திருமணம் நடந்தேறும். சொத்துகள் சேரும். ஆரோக்கியம் சிறக்கும். நல்ல வேலை கிடைக்கும். சுயமாக சம்பாதிக்க தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தந்தையின் உதவியால் பல நன்மைகள் கிடைக்கும்.
திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரிகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நிறைவேறும். சிறப்பான காலகட்டம் இது. சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வியில் சாதனை படைப்பீர்கள். விரும்பிய கல்வி வாய்ப்பு கிடைக்கும். உயர் கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாட்டில் கல்வி வாய்ப்பு கிடைக்கும். வேண்டிய உதவிகள் தேடிவரும்.
கலைஞர்களுக்கு உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பல ஒப்பந்தங்கள் கிடைக்கும். செல்வவளம் உண்டாகும். சொத்துகள் சேரும். நாலாபக்கமும் உதவிகளும் வாய்ப்புகளும் வந்து குவியும். சரியாக பயன்படுத்தினால் முத்திரை பதிக்கும் சாதனைகளைச் செய்து காட்டுவீர்கள்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு சிறப்பான பலன்கள் நடக்க இருக்கின்றன. உங்களின் முழு திறமையும் வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டது. தவிர்க்க முடியாத சக்தியாக மாறப்போகிறீர்கள். புலனாய்வு பத்திரிகையாளராக சாதனை ஒன்றைச் செய்து காட்டுவீர்கள். உங்கள் செய்தியால் நாடே பரபரப்பாக மாறும். புகழ் வெளிச்சம் கிடைக்கும்.
பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி காலம் கடக ராசிக்கு மிக அற்புதமான பலன்கள் நடக்கும். இதற்கு குரு பகவான் மட்டும் காரணமல்ல, சனி பகவான், ராகு கேது பகவான் என முக்கியமான கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால், கண்ணை மூடிக்கொண்டு எதைச் செய்தாலும் முழுமையான வெற்றியை சிந்தாமல் சிதறாமல் எட்டுவீர்கள் என்பது நிச்சயம்.
வணங்க வேண்டிய தெய்வம் - காஞ்சிபுரம் சித்திரகுப்தர் ஆலயம்
மற்றும் சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வருவதும், மிகக் குறிப்பாக மருதமலையில் பாம்பாட்டிச் சித்தர் வசித்த குகைக்கு சென்று தியானம் செய்து வருவதும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago