பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
அதிக உழைப்பு இல்லாமல் திறமையைக் கொண்டே முன்னேறும் தனுசு ராசியினரே!
இந்த மாதம் ராசியாதிபதி குருவின் சஞ்சாரத்தால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். பாக்கியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்திசாதுர்யத்தால் காரிய நன்மை பெறுவார்கள்.
குடும்பாதிபதி சனியின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சனியின் சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
மூலம்:
இந்த மாதம் பொருட்களைக் களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடைமைகள் மீது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.
பூராடம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமண ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூருக்குச் செல்ல வேண்டி வரும்.
பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலையிட்டு வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
***************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago