விருச்சிக ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்;   வீண் பழி; அடுத்தவர் பிரச்சினை; காரியத்தில் வெற்றி; தடைகள்; எதையும் சமாளிப்பீர்கள்!

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வாழ்க்கையில் முன்னேற்றமடைய திட்டமிட்டுச் செயல்படும் விருச்சிக ராசியினரே.

இந்த மாதம் எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. தாமதப்பட்ட காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும்போது வீண் பழிச்சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

ராசியில் கேது இருந்தாலும் ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும்.

பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் முதலானோரின் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.
மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது நல்லது. அடுத்தவரை நம்பி காரியங்களில் ஈடுபடுவது நன்மை தரும்.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு ஏற்பட்டாலும் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.

கேட்டை:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்