பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மனதிற்கும் அதன் எண்ண ஓட்டத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன ராசி அன்பர்களே!
நீங்கள் எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும்.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாகப் பேசுவது நல்லது.
கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.
பெண்கள் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனத்துடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களைப் படிப்பது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பைக் கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
உத்திரட்டாதி:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.
ரேவதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வந்து, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் அகலும். செயல்களில் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
~~~~~~~~~~~~~~~~~
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago