- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
தனுசு ராசி அன்பர்களே வணக்கம்.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு வழங்க இருக்கும் பலன்களையெல்லாம் பார்ப்போமா?
இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் ராகுவும் உங்கள் ராசியிலேயே கேதுவும் இருந்தனர். இப்போது ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்துக்கு வருகிறார். கேது 12ம் இடம் செல்கிறார்.
இதுவரை கடும் மன உளைச்சலுக்கும், நெருக்கடிகளுக்கும் ஆளாகி வந்தீர்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து தவித்தீர்கள். ஏற்கெனவே ஏழரை சனி, ஜென்ம குரு இவர்கள் போதாதென்று ஜென்ம கேது ஏழில் ராகு, பாவம்! இப்படிப்பட்ட சிறைவாசம் போன்ற நிலை எதிரிக்கும் வரக்கூடாது என்ற மனோபாவம் தோன்றும் அளவுக்கு சிக்கல்களையும் சந்தித்திருப்பீர்கள்.
இனி நிம்மதி பெருமூச்சு விடலாம், இழந்த அனைத்தையும் ஒன்றுக்கு பத்தாக திருப்பி எடுக்கும் காலம் தொடங்கி விட்டது. இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன் தான்! அடுத்தவர்களின் ஏளனத்திற்கு ஆளான நீங்கள் இனி, விஸ்வரூபம் எடுக்கப் போகிறீர்கள்.
ஆமாம்... உங்களுக்கு மகாசக்தி யோகம் தொடங்கி விட்டது. ராகு ஆறாமிடம் வந்தால் அது மகாசக்தி யோகம். எதிரிகள் உதிரிகள் ஆவார்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும். நகைத்தவர்கள் உங்களிடம் சரணடைவார்கள். கடன்களால் நிம்மதி இழந்த நீங்கள் இனி கடனே இல்லாத வாழ்க்கையைப் பார்க்கப் போகிறீர்கள்.
தாய் தந்தையரின் ஆதரவால் இன்னும் பலம் பெறுவீர்கள். பொருளாதார தன்னிறைவு ஏற்படும். வருமானம் பல வழிகளில் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற வீட்டு வேலைகள் இப்போது தொடரும். நின்று போன வங்கித் தவணைகள் ஒரே தவணையாக முடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். தாமதப்பட்ட திருமணம் இனிதே முடியும்.
பணியின் காரணமாகவோ அல்லது வருத்தத்தின் காரணமாகவோ பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள். உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாகத் தீரும். அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை மாறி மருந்தால் குணமாகும் நிலை உண்டாகும்.
அலுவலக நெருக்கடிகள், தொல்லை தந்த சக பணியாளர்கள், கடுமை காட்டிய உயர் அதிகாரிகள் என அனைத்தும் காணாமல் போகும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உங்களின் திறமைக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவியும். நிராகரிக்கப்பட்ட பதவி உயர்வு தேடி வரும். அயல்நாட்டு நிறுவனங்களில் பணியாற்ற அழைப்பு வரும்.
தொழில் முடக்கம் முடிவடைந்து இயல்புநிலைக்குத் திரும்பும். ஊதியம் தொடர்பான பிரச்சினையில் வேலையைவிட்டு விலகிய ஊழியர்கள் திரும்பவும் வேலைக்குச் சேருவார்கள். போட்டி நிறுவனங்களின் எதிர்ப்புகளை லாவகமாகக் கையாண்டு மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு தொழிலைத் திருப்புவீர்கள்.
நீண்ட மாதங்களுக்கு முன் ஏதேதோ காரணங்களால் நழுவிப்போன தொழில் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். அரசு நெருக்கடிகள் இனி இருக்காது. அரசு நடவடிக்கைகள் நீதிமன்றம் மூலம் ரத்தாகும்.
உற்பத்திப் பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகும். புதிய தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள், இயந்திரங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்கள். நிறுவனங்கள் மீதான கடன்களை முழுமையாக அடைத்து, புதிய தொழில் தொடங்குவதற்கு புதிய கடன் பெறுவீர்கள். எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வளர்ச்சி நிச்சயம் என்பது உறுதி.
வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். வியாபாரப் போட்டியை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பின்தங்கிய நிலையில் இருந்த நீங்கள், சூட்சுமம் புரிந்து அதிரடியாக முன்னுக்கு வருவீர்கள். இழந்த வாடிக்கையாளர்கள் திரும்ப வருவார்கள். சலுகைகளுடன் கூடிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார விஷயமாக ஏமாந்து போன பணம் இப்போது திரும்பக் கிடைக்கும். வியாபாரத் தோல்வியில் பாடம் கற்ற நீங்கள் இனி தோல்வி இல்லாத வியாபாரத்தைச் செய்வீர்கள்.
விவசாயப் பணிகள் சிறப்பாக இருக்கும். அரசிடமிருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் வரவேண்டிய பணம் இப்போது கிடைக்கும். உற்பத்தியான விளைபொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகி தடையற்ற வருமானம் இருக்கும். இயற்கை விவசாயத்திற்கு வருவீர்கள்.
அரசியலில் இருப்பவர்களுக்கு வீண் பழியிலிருந்து மீண்டு, நிரபராதி என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிப்பீர்கள். இழந்த பதவி திரும்பக் கிடைக்கும். மேலிடத்தின் பார்வை உங்கள் பக்கம் திரும்பும். இனி உங்களுக்கு ஏற்றம் தரக்கூடிய காலம் என்பதை அடுத்து உங்களுக்கு நிகழும் நிகழ்வுகள் மூலமாக அறிவீர்கள்.
பெண்கள், இதுவரையிலான பழிபாவத்திலிருந்து மீண்டு வருவீர்கள். தவறாக சித்திரிக்கப்பட்ட பிம்பம் உடைந்து, நீங்கள் புடம் போட்ட தங்கம் என்பதை நிரூபணம் செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள் தீரும். கஷ்ட காலம் விலகி வசந்த காலம் ஆரம்பிக்கிறது.
திருமணம் நடக்கும். தாமதப்பட்ட புத்திர பாக்கியம் உண்டாகும். இழந்த வேலையை விட சிறந்த வேலை கிடைக்கும். கடன் தீரும். அடகு வைத்ததை மீட்பீர்கள். அசையா சொத்துகள் சேரும். ஆடை அணிகலன்கள் சேரும். சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வந்து உங்களுக்கான பாகம் கிடைக்கும். கணவர் வழி உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மாணவர்கள் இனி கல்வியில் உன்னதமான நிலையை எட்டுவார்கள். அயல்நாட்டில் கல்வி பயிலும் ஆசை நிறைவேறும். சலிப்பும் மந்தமும் இனி இருக்காது. கூடா நட்புகளை விலக்கி வைப்பீர்கள்.
கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். ஏமாற்றங்களையே சந்தித்த நீங்கள் இனி நல்ல மாற்றங்களை மட்டுமே காண்பீர்கள். காசில்லாமல் கஷ்டபட்ட நீங்கள் இனி தாராள பணப்புழக்கம் ஏற்படும்படியான வாழ்க்கை அமையும். உண்மையானவர்களை அறிந்து கொள்வீர்கள். இனி உன்னதமான வாழ்க்கை உங்களுக்கு அமையப்போகிறது என்பது உறுதி..!
கேது பகவானால் கிடைக்கும் பலன்கள்-
கேது பகவான் உங்கள் ராசியில் இருந்தவரை விரக்தி, வேதனை, இயலாமை என வருந்தினீர்கள். யாரும் அறியாமல் கண்ணீர் விட்டு கலங்கிய நீங்கள் இனி, சாதனை மனிதராக, வெற்றியாளராக வலம் வருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். மனக்காயங்கள் ஆறும். வருமானம் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மகான்கள் சந்திப்பு, குருமார்கள் அருளாசி போன்றவை கிடைக்கும். நல்ல வழிகாட்டி உங்களுக்குக் கிடைப்பார். தவறான பழக்கங்களில் இருந்து மீள்வீர்கள்.
பிரிந்த உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். தாயின் அன்பும் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்ட நீங்கள், இப்போது தாயாரின் அன்பைப் பெறுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் சரியாகும். ஆடம்பரச் செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. இழந்த சொத்துகளை மீட்கவும் வழி கிடைக்கும்.
இன்னொரு விஷயம்... பொதுவாக நீங்கள், இனி வாக்கு கொடுப்பது, சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவது என்பது கூடாது. சிவாலயங்களில் இருக்கும் தல விருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றி வருவதும், முதியவர்களுக்கு உதவுவதும் நன்மைகளைத் தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -வெக்காளியம்மன், திருச்சி.
****************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago