மீன  ராசிக்காரர்களுக்கு - ஆகஸ்ட் மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே!

நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்களில் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

குடும்பாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.

பெண்களுக்கு : எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு : வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதுர்யத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

அரசியல்துறையினருக்கு : இதுவரை இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு : கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.கடன்கள் குறையும்.

உத்திரட்டாதி:
பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீகச் சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரேவதி:
தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்