- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
எந்தக் காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்ப ராசியினரே!
இந்த காலகட்டத்தில் எல்லாக் காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதப்போக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.
குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களுக்கு : இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு : பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்துறையினருக்கு : எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்களுக்கு : கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:
பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தைக் கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது.
சதயம்:
செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு உடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைத் தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும். சற்றே அலைச்சல்கள், சுகவாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
32 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago