புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை) 

By செய்திப்பிரிவு

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வரவு இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் எடுத்துக்கொண்ட வேலைகளில் எந்த தொய்வும் ஏற்படாது. அலுவலக வேலை தொடர்பாக ஒரு சில அலைச்சல்கள் ஏற்படும். வரவேண்டிய நிலுவைத் தொகை ஏதும் இருந்தால் மேலும் சில நாட்கள் தள்ளிப் போகும்.

தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்,ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும், ஆனால் அலைச்சல் அதிகமாக ஏற்படும்.

செவ்வாய் -
சகோதரர்கள் வகையில் செலவுகள் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பாக வங்கியின் உதவி கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

புதன் -
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட திட்டங்களை வகுப்பீர்கள்.வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பாக சுமுக முடிவு ஏற்படும்.

வியாழன்-
அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும் நாள். முகமலர்ச்சியோடு இருப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, சுபகாரியம் நடத்துவதற்கான தேதிகள் முடிவாகும்.

வெள்ளி-
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணத்தை கையாளும் பொழுது அதிக எச்சரிக்கை உணர்வு தேவை. பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். முக்கிய சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வைக்க வேண்டும்.

சனி-
தாமதமான வேலைகளையெல்லாம் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களை சந்திப்பதால் ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். சகோதரர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து தருவீர்கள்.

ஞாயிறு-
நண்பர்களோடு சேர்ந்து புதிய தொழில் தொடங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். அத்தியாவசியமான செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நடக்கும்.
************************************
பூசம் -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகள் வகையில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். முழு முயற்சியோடு ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.

சொத்து தொடர்பான விஷயங்களில் இப்பொழுது பாகப்பிரிவினைகள் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். இருந்தாலும் ஒரு சிலருக்கு இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், இயல்பான நிலையே தொடரும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த அழுத்தங்கள் விலகும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வீடுகளுக்கே பொருட்களை கொண்டு சேர்ப்பது போன்ற உத்திகளை கையாண்டு வியாபாரத்தை நல்ல வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வீர்கள்.

பெண்கள் திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும். தங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிந்தவரை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் கடன் கொடுப்பதோ அல்லது கடன் பெறுவதும் கூடாது.

செவ்வாய் -
தாமதப்பட்ட பணிகள் அனைத்தும் இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சில கருத்து வேறுபாடுகளும் இன்று சுமூகமாக தீரும். தொழில் தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். அது தொடர்பான தகவல் உறுதியாகும்.

புதன் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். மனநிறைவு உண்டாகும் நாள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். தாய்மாமன் வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் போடும் வாய்ப்பு உள்ளது. கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

வியாழன் -
முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த குறைகள் அனைத்தும் இன்று சரியாகும். உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களால் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் உறுதியாகி மனமகிழ்ச்சி ஏற்படும்.

வெள்ளி-
நல்ல தகவல்கள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்களும் மனநிறைவைத் தரும் படியாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

சனி-
வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் எதிர்காலம் கருதி கவலை தோன்றும். ஆரோக்கியத்தில் தேவையில்லாத அச்சம் ஏற்படும். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

ஞாயிறு-
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************************
ஆயில்யம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

சகோதரர் மற்றும் சகோதரிகள் வகையில் உதவிகள் கிடைக்கும். தர்ம காரிய சிந்தனைகள் ஏற்படும். உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து தருவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் மறையும்.
தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் மிக விரைவாக முடிவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகும்.

எதிர்ப்பு தந்து கொண்டிருந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இயல்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள்-
முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். குறிப்பாக கடன் தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான நிலை ஏற்படும். அலுவலகப் பணிகளில் இருந்து அழுத்தங்கள் குறையும். தொழில் தொடர்பாகவோ அல்லது வியாபாரம் தொடர்பாகவோ வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். எடுத்துக்கொண்ட வேலைகள் கடும் சிரமத்திற்கிடையே செய்ய வேண்டியதிருக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம்.

புதன்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் பெருகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். ஒப்பந்தங்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதால் அதிகம் உழைக்க வேண்டியது வரும். தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும் புதிய தொழில் ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உற்பத்தி சார்ந்த பொருட்கள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வியாபார வாய்ப்புகள் ஏற்பட்டு வளர்ச்சிக்கான வழி கிடைக்கும்.

வெள்ளி-
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்வீர்கள்.

சனி
அலைச்சல் அதிகமாக ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி கேட்டு நெருக்கடி தருவார்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விடுங்கள்.


ஞாயிறு -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சி தரும்படியான தகவல் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்