இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: அத்தியாவசிய செலவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம்:மனதில் நிலவிய இறுக்க நிலை மாறும். எதையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்க திட்டமிடுவீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் நிலவிய குழப்பம் நீங்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கலைப் பொருட்கள் சேரும்.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து நல்ல தகவல் வரும். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. வெளி உணவுகள், வாயு பதார்த்தங்களைத் தவிர்த்து விடுங்கள்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் ஏற்படும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். மூத்த சகோதரர் உதவுவார்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம் மற்றும் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமாக செயல்பட்டு தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்