- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விசாகம் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் வாரம்.
தேவையான உதவிகள் தானாக தேடி வரும். ஆனாலும் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து தேவையற்ற மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். எனவே மனக் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
இளைய சகோதரர்களிடம் தேவையற்ற சண்டை சச்சரவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம், அல்லது அவர்களின் மன வருத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.
பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.
செவ்வாய் -
பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பொருளாதார சிக்கல்களினால் சில சங்கடங்களைச் சந்தித்து வந்த நீங்கள் இன்று அந்த பொருளாதாரச் சிக்கல் தீரக் கூடிய அளவிற்கு வருமானம் கிடைக்கும்.
புதன் -
எதிர்கால சிந்தனைகள் அதிகமாக தோன்றும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும்.
வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கிய பற்றிய தகவல் உறுதியாகி மகிழ்ச்சியை தரும். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமான வாய்ப்பு கிடைக்கும்.
வெள்ளி -
மனதில் தேவையற்ற அச்ச உணர்வு உண்டாகும். முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை.
சனி -
சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகப் பணிகளை தீவிர கவனம் செலுத்தி அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கக்கூடிய நாள். ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் லாபகரமாக இருக்கும்.
ஞாயிறு -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல் தோன்றி மறையும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எனவே குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த பணவரவில் தாமதம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள். வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும்.
***************************
அனுஷம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.
தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
நெருங்கிய உறவினர்களால் ஒரு சில தேவையற்ற சங்கடங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகப் பணிகளில் அழுத்தம் அதிகரிக்கும். பணிகளை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு உதவிகளும் வங்கியின் கடன் உதவியும் தொழிலுக்கு கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் கடனுக்கு வியாபாரம் செய்யாமலிருப்பது நல்லது. பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பெண் நண்பர்களால் உதவிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
நிதானமாகப் பணியாற்ற வேண்டிய நாள். அவசரத்துடன் செயல்களில் இறங்காதீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். எந்த ஒரு பொது விஷயத்திலும் கருத்து கூறாமல் இருக்க வேண்டும்.
செவ்வாய் -
குடும்பத்தில் ஏற்பட்ட பூசல்கள் மறையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
புதன் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கக் கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் தேவைகள் பூர்த்தியாகும்.
வியாழன் -
திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஆரோக்கிய அச்சுறுத்தல் தோன்றும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவதால் செலவுகள் ஏற்படும்.
ஞாயிறு -
நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***************************
கேட்டை -
கடுமையான நெருக்கடிகளும் மன உளைச்சல்களும் தவித்துக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த வாரம் அனைத்து பிரச்சினைகளிலும் தீர்வு கிடைத்து மன நிம்மதி ஏற்படக்கூடிய வாரமாக இருக்கும்.
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.
செவ்வாய் -
மருத்துவச் செலவுகள் குறையும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
புதன் -
நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரிடம் கடுமை காட்டாமல் இருப்பது நல்லது. தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம்.
வியாழன் -
பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும், நன்மைகளும் கிடைக்கும்.
வெள்ளி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக சந்திக்க இருந்த நபரை இன்று சந்திப்பதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள், பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சேமிப்பு உயரக்கூடிய நாளாக இருக்கும்.
சனி -
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.
ஞாயிறு-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார நிமித்தமாக பேச்சுவார்த்தைகள் மனநிறைவை ஏற்படுத்தித் தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து கொள்வது நல்லது.
********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago