’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்தம் -
எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் அனைவரது ஆதரவும் கிடைக்கும். முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகுவார்கள்.
கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகமாகும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நிறுவனங்களோடு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு சிலர் ஏற்கெனவே இருக்கும் வங்கிக் கடனில் கூடுதலாக கடன் பெறவும் வாய்ப்பு உண்டு. வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
செவ்வாய்-
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வியாபார இடங்களில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
புதன்-
ஒரு சில வேலைகள் நடக்கும். முடிவில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி குறைவாகவே கிடைக்கும். வியாபார லாபத்தில் பங்கு தர வேண்டியது வரும்.
வியாழன்-
வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளி-
குடும்ப நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்காலத் தேவைகளுக்காக சேமிக்கும் எண்ணம் தோன்றும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை இல்லாத பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் மாறும்.
சனி-
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்பத்தினருக்கு தேவையானவற்றை வாங்கித் தருவீர்கள் அத்தியாவசியச் செலவுகள் மட்டுமே ஏற்படும். அநாவசிய செலவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
ஞாயிறு-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது, வீட்டு பராமரிப்புச் செலவுகள் என செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்கள் கடன் கேட்டு வருவார்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள், மன வருத்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமைதியாக இருப்பதும், குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவிடுவதும் நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீகாளிகாம்பாள் அன்னையை வணங்குங்கள். பிரச்சினைகளும் குழப்பங்களும் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
*****************************************
சித்திரை -
முயற்சிகளால் வெற்றி காண வேண்டிய வாரம். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
அவசரமான முடிவுகளை எடுக்கக் கூடாது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பாராத புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு நீண்டநாளாக இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
தேவையில்லாத சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அலுவலகப் பணியில் கூடுதல் சுமை ஏற்படும்.
செவ்வாய்-
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதரிகளிடம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் இருந்த ஒரு சில தடைகளும் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் முதலீடுகளுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள்.
புதன்-
எந்த விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். பணச்செலவு அதிகமாக ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.
வியாழன்-
கடந்த சில தினங்களாக இருந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீர்வதற்கான வழி வகை கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
வெள்ளி-
நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய பணம் வந்துசேரும்.
சனி-
வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பணியை இன்று நிறைவு செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். வீடு மாறும் எண்ணம் ஏற்படும்.
ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
அம்மனை வணங்குங்கள். அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்குங்கள். எதிர்ப்புகள் அகலும். தேவைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும்.
**************************
சுவாதி -
நன்மைகள் ஏற்படும் வாரம்.
ஆனாலும் ஒரு சில மனக் குழப்பங்கள் ஏற்படும். மனதில் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் நிலையைப் புரிந்து கொண்டு குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் கூட உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருவார்கள்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். அரசு வழி உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையும் கூடுதல் கவனமும் செலுத்தவேண்டும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்றவை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். பழைய வங்கிக் கடனை அடைத்து புதிய கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக அனைத்து வசதிகளும் கிடைக்கும். தடைபட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.
செவ்வாய்-
அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியைச் செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்கள் இழுபறியாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.
புதன்-
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழில் தொடர்பாக புதிய யுத்திகளை கையாளத் திட்டம் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். இவை அனைத்திற்கும் உங்களுக்கு தேவையான பண உதவி மற்றும் அரசு தொடர்பான சலுகைகள் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் இணக்கமாக இருக்க வேண்டும்.
வியாழன்-
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையைக் கையாள வேண்டும். பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் தொடர்பாக தள்ளிப்போன சந்திப்பு இன்று நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொல்லை தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.
சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்தம் இன்று நிறைவேறும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ஞாயிறு-
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இந்த நாளைக் கழிப்பீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
******************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago