மேஷம், ரிஷபம், மிதுனம் - மே மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

எந்தக் காரியத்தை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற மேஷ ராசியினரே !
இந்தக் காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் மிக பலமாக இருக்கிறார். அவர் தனவாகு குடும்பஸ்தானத்தை பார்ப்பதால் பணவரத்து அதிகமாகி, பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். ராசிநாதன் செவ்வாயை சனி பார்ப்பதால் சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.
தொழில் ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.
பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷ யங்களில் கூட கவனமாகச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.
அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடையே சுமுக உறவு இருக்க விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அசுபதி:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

பரணி:
இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

கார்த்திகை:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப்போக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30, 31
***********************************************

.
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

திறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறும் ரிஷப ராசியினரே!
நீங்கள் நேரத்தின் மதிப்பை அறிந்தவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தனஸ்தானத்தில் இருப்பதால் பலம் அதிகம். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் பார்வையால் அனைத்துத் தடைகளும் அகலும்.
தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். அதன் அதிபதி சனி தொழில் ஸ்தானத்தையும் தனஸ்தானத்தையும் பார்க்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்øதைகளுக்காகப் பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
கார்த்திகை:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

ரோகிணி:
இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் செல்வச் சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுர்யமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
*******************************************************

மிதுனம்
(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

நல்லவர், கெட்டவர் என்று பாராமல் எல்லோரிடமும் நாசூக்காக நடந்து கொண்டு அவர்களை நன்கு பயன்படுத்தி காரிய வெற்றி பெறும் திறமையுள்ள மிதுன ராசியினரே
நீங்கள் விவேகத்துடன் முடிவெடுப்பதில் சிறந்தவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களைத் தரும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக நீங்கள் அலையும் அலைச்சல் வெற்றி தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.
கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கெனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

திருவாதிரை:
இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களைப் பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சுக்கிரன்;
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
****************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்