மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; ஏப்ரல் 23 முதல் 29-ம் தேதி வரை 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும்.
கோபமாகப் பேசுவதை தவிர்த்து நிதானமாகப் பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.
குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். பெண்களுக்கு கோபத்தைத் தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும்.
உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியம். கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. அரசியல்துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
திசைகள்: தெற்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர, எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
******************************************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் அறிவுத் திறமை கூடும்.
சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள்.
வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும்.
கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது. பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும்.
கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். அரசியல்துறையினருக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை
எண்கள்: 6, 9
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
***********************************

மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் அனைத்து கிரக சஞ்சாரமும் உங்களுக்கு சாதகம் தரும் வகையில் இருக்கிறது.
பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களிலும் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும்.
விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும்.
அரசியல்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.
****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்