- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்வினி -
இந்த வாரம் நல்ல பலன்களை தரக்கூடிய வாரமாக இருக்கும்.
வாரத் துவக்கத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகளும், முக்கியமாக ஒரு சில மருத்துவ செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளன. உத்தியோகத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும்.
இதுவரை தொழில் செய்யும் எண்ணம் இல்லாதவர்கள் கூட தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு குடும்பத் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும், வீட்டுப் பொருட்கள் பழுது ஏற்படும். அதை சரி செய்ய வேண்டியது வரும். மாணவர்களுக்கு கல்வியைத் தவிர பிற விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
திங்கள்-
வரவும் செலவும் சமமாக ஏற்படும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான லாபம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
செவ்வாய்-
அதிக நன்மைகள் ஏற்படும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
புதன்-
தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த இக்கட்டான நிலை விலகும். மனதில் தேவையற்ற சிறிய கலக்கம் ஒன்று ஏற்படும். மனக்குறைகளை யாரிடம் சொல்வது என்று தவிப்பு ஏற்படும்.
வியாழன்-
வருமானம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகளும், அதிக லாபமும் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள், தேவைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டு இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள்.
வெள்ளி-
கோபம் விரக்தி தோன்றும் கோப உணர்வுகளை குடும்பத்தாரிடம் காட்டுவீர்கள். நண்பர்களிடம் தேவை இல்லாமல் பிரச்சினைகளை உண்டு பண்ணுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் வாக்குவாதங்கள் ஏற்படும், பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நிதானமாக இருப்பது நல்லது.
சனி-
ஆதாயம் அதிகமாக ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டு. தொழில் வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். சகோதரர்கள் தேடி வந்து உதவுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். புதிய பயிற்சிகளை மேற் கொள்வார்கள்.
ஞாயிறு-
நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் என அனைவரும் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். நீங்களும் உங்களால் ஆன உதவிகளை செய்து தருவீர்கள். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும் .
வணங்கவேண்டிய தெய்வம்- சிவாலய வழிபாடு, சிவ புராணம் வாசித்தல் அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.
******************************************
பரணி நட்சத்திரம்-
எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.
பணவரவு தாராளமாக இருக்கும். அதேசமயம் செலவுகளும் அதிகமாக ஏற்படும். உத்தியோகத்தில் சகஜ நிலைமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். வியாபாரத்திற்கு ஒருசில முதலீடுகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பச் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகளும், வாய்ப்புகளும் கிடைக்கும்.
திங்கள்-
பொறுமை, நிதானம் மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவு ஏற்பட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதங்களை செய்யக்கூடாது.
செவ்வாய்-
தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாண்டு வியாபாரத்தை வளர்ச்சியடையச் செய்வீர்கள். தொழிலுக்கு இதுவரை இருந்த தடைகள் அகலும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
புதன்-
எதிர்பாராத உதவிகளும் எதிர்பாராத பணமும் கிடைக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். சலுகைகள் கிடைக்கும். குழந்தைகளின் கல்விக்காக ஒரு சில முயற்சிகளை எடுப்பீர்கள்.
வியாழன்-
வேலையைப் பற்றிய அச்சம் நீங்கும். ஒரு சிலர் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். அது தொடர்பான ஆலோசனைகளை இன்று செய்வீர்கள். பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். கல்லூரி கால நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முக்கியமான நிறுவனத்திலிருந்து அழைப்புகள் வரும்.
வெள்ளி-
எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கியமான சந்திப்புகளால் தொழில் வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. மகளிர் குழுக்கள் மூலம் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சனி-
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படும். குழப்பங்கள் அதிகரிக்கும். சோம்பல் உண்டாகும். அலுவலகப் பணிகளில் சுணக்கம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒருவித மந்த நிலை ஏற்படும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். சிக்கனமாக செலவு செய்யுங்கள்.
ஞாயிறு-
இந்த நாளில் முக்கியமான பிரச்சினைகள் தீரும். வியாபார விஷயமாக சந்திப்புகள் ஏற்படும். தொழில் தொடர்பாக ஒரு சில ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். தரகு தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் போடும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். நீண்டநாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வியாபாரரீதியாக ஒரு சில தேவையான உதவி இன்று கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்- துர்கை வழிபாடு செய்யுங்கள். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
************************************************
கார்த்திகை நட்சத்திரம்-
நன்மைகள் அதிகம் ஏற்படும் வாரம்.
உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப உறவுகளால் தேவையான உதவிகள் கிடைக்கும், குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதரர்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சி, ஆர்வம் ஏற்படும்.
கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். பொதுவாக யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பதும், புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதும் நன்மை தரும்.
திங்கள்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கி தொடர்பான கடனுதவிகள் கிடைக்கும் அல்லது அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் எளிதாக முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் ஒற்றுமை ஏற்பட்டு பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகமாகும்.
செவ்வாய்-
மற்றவர்கள் உங்களை கோபப்படுத்துவார்கள். நீங்களும் அதற்கு தகுந்தாற்போல் கோபத்தை வெளிப்படுத்தி உங்களையும் உங்கள் உடல்நலத்தையும் கெடுத்துக் கொள்வீர்கள். எனவே அதிகம் கோபப்படாமலும் உணர்ச்சிவசப்படாமலும் இருக்க வேண்டும். உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். பிரச்சினைகள் எதுவும் உங்களை அண்டாது.
புதன்
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலக வேலைகளில் ஏற்பட்ட குளறுபடிகளை இன்று சரிசெய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த தேக்கநிலை மாறும். அரசு வழித் தொந்தரவுகள் இனி இருக்காது. பெண்களுக்கு மனக் குழப்பங்கள் தீரும். இன்றைய நடவடிக்கைகள் மன திருப்தியை தரும் அளவிற்கு இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
வியாழன்-
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத அளவிற்கு நன்மைகள் நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும்.
வெள்ளி-
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு சில திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்துவீர்கள். சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் ஏற்படும். அதற்காக நண்பர்களிடமும், தொழில் வல்லுநர்களிடமும் ஆலோசனை கேட்பீர்கள், குடும்பத்தாருடன் இதைப் பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தாரும் தேவையான உதவிகளைச் செய்வார்கள். மனைவிவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
சனி-
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த இடைஞ்சல்கள் அனைத்தும் விலகும். அரசு வழித் தொந்தரவுகள் அறவே நீங்கும். அரசு ஆதாயமும் சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களால் லாபம் கிடைக்கும்.
ஞாயிறு-
குடும்பத்தோடு நேரத்தை செலவழியுங்கள். வெளியே சுற்றுவது நண்பர்களோடு நேரத்தை கழிப்பது போன்றவைகளை செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். அத்தியாவசிய செலவுகளை தவிர ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்- பைரவர் வழிபாடு செய்யுங்கள். எதிர்ப்புகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago