- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி-
உங்கள் அனைவருக்கும் சார்வரி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நிதானமாக செயல்பட்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய வாரம். அலுவலக பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குழப்பமான நிலை மாறும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். தொழில் தொடர்பான வளர்ச்சி சீராக இருக்கும். தேவையான உதவிகள் தானாக தேடி வரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் தகவல் வரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வமும் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அலைச்சல் அதிகரித்தாலும் லாபத்தில் குறைவிருக்காது. குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும்.
செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும்.பதட்டத்தைக் குறைக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்யுங்கள். குழந்தைகளிடமும் வாழ்க்கைத் துணையிடம் இணக்கமாக இருங்கள்.
புதன்-
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அலுவலகத்திலிருந்த நெருக்கடி தீரும். தாமதப்பட்ட வேலைகளை இன்று விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாழன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். வியாபாரம் தொடர்பாக தேவையான பண உதவி கிடைக்கும்.நண்பர்களுக்கு உதவி செய்வதும், அவர்களால் உங்களுக்கு பதில் உதவி கிடைப்பதும் நடக்கும்.
சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
திருமலை திருப்பதி சீனிவாச பெருமாளை வணங்குங்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும் நன்மைகள் அதிகமாகும்.
*******************************************************
மிருகசீரிடம் -
உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக உதவிகளும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சகோதரர்களிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். நிதானமாக இருங்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து யோசித்து அதன் பிறகு முடிவெடுங்கள்.
வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். புதிய வேலை தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலக சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
ஞாயிறு -
நண்பர்களுடன் பயணங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு கருத்து கூறாமல் இருப்பது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் அன்னையை வணங்குங்கள் நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
*******************************************************
திருவாதிரை -
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வாரம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றி கிடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் முற்றிலுமாக அகலும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் காரணமாக பணிச்சுமை அதிகரிக்கும்.
இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். மாணவர்களுக்கு புதிய கல்வி அல்லது கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.
செவ்வாய் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வரும். அலுவலகத்திலிருந்து நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்.
வியாழன் -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். உறவினர்களிடம் கவனமாகப் பேசுங்கள்.
சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பரை தொடர்பு கொண்டு பேசுவீர்கள்.
ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய மனக்கவலை தீரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீகால பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago