பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  - வார நட்சத்திர பலன்கள்- - (மார்ச் 23 முதல் 29 வரை)  - 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு


பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - வார நட்சத்திர பலன்கள்- - (மார்ச் 23 முதல் 29 வரை)


- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி -
நன்மைகள் பலவாறாக நடக்கும். உடனடியாக முடிவுகளை எடுக்காமல் நிதானமாக ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்கு ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
முயற்சிகளில் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்கும் எண்ணம் தோன்றும். வியாபாரத்தில் புதிய கிளைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வீர்கள்.

செவ்வாய்-
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

புதன்-
நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகமாக ஏற்படும். குறிப்பாக வாகன பழுது மற்றும் வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். அமைதியாக அனைத்தையும் கடந்து செல்லுங்கள்.

வியாழன்-
எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும் நாள். அலுவலகத்தில் சகஜமான நிலையே நீடிக்கும். சக ஊழியர்கள் வலிய வந்து உதவுவார்கள். சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள்.

வெள்ளி-
தேவையான பணம் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.வீடு வாங்குவது தொடர்பான எண்ணம் தோன்றும்.தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


சனி-
பராமரிப்பு தொடர்பாக செலவு செய்ய வேண்டியது வரும். முக்கியமான சந்திப்புகள் ஏதும் இருந்தால் ஒத்தி வையுங்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். ஒரு சில வேலைகள் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் தாமதமாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*****************************************************

உத்திரட்டாதி-
ஏராளமான நன்மைகள் நடைபெறும் வாரம். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்கும்.
புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உறுதியாகும்.தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பாராத ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி, புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களின் உதவியால் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
நல்ல தகவல் கிடைக்கும் நாள்.அது மனம் மகிழும்படியாக இருக்கும். அது வேலை தொடர்பாகவும் இருக்கலாம் அல்லது சுப காரியங்கள் பற்றியதாகவும் இருக்கலாம்.நினைத்ததை நினைத்தபடியே நடக்கும் பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் ஆதாயம் தரும்.

செவ்வாய்-
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் பேசி முடிக்கப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பெண்களுக்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும்.

புதன்-
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். அது தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை பற்றிய தகவல் கிடைக்கும்.

வியாழன்-
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் நண்பர்களிடமும், அலுவலகத்திலும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.பயணங்கள் செய்ய வேண்டாம்.

வெள்ளி-
சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இணக்கமான கருத்தொற்றுமை ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.

சனி-
பலவித நன்மைகள் நடைபெறும்.சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது அல்லது உறவினர்கள் வருகை போன்றவை ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சரியாகி முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு-
எதிர்காலம் கருதி சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனம் நிம்மதியாக இருக்கும்.வியாபாரம் தொடர்பான விஷயங்கள் தள்ளிப்போகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
*********************************************************************

ரேவதி-
முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் பெண்களுக்கு சில எதிர்பாராத நன்மைகள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான நிலை தொடர்கிறது. கலைஞர்களுக்கு நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சில வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேடி வந்து உதவி செய்வார்கள். நன்மைகள் அதிகமாக நடைபெறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்பத்தினருக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து தருவீர்கள்.

செவ்வாய்-
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஒருசில சுபச்செலவுகள் ஏற்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள்.

புதன்-
முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக தீரும். வங்கிக்கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக உதவி கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். வருமானம் இருமடங்காக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். வியாபாரத்தில் அமோகமான வளர்ச்சி உண்டாகும். பங்குவர்த்தகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வெள்ளி-
உறவினர்களாலும் நண்பர்களாலும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். சொத்துக்கள் தொடர்பாக விஷயங்களில் இணக்கமாக செல்வது நல்லது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். முக்கியமான கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். தொழில் தொடர்பாக பயணம் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். மாமன் வகை உறவுகளிடம் உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். மகாவிஷ்ணு வழிபாடு தொடர்ந்து செய்து வாருங்கள். நெருக்கடிகள் குறையும். நன்மைகள் அதிகமாகும்.
**************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்