இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - நட்சத்திரப் பலன்கள் -   (மார்ச் 16 முதல் 22 வரை) - புனர்பூசம், பூசம், ஆயில்யம் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - நட்சத்திரப் பலன்கள் -
(மார்ச் 16 முதல் 22 வரை) - புனர்பூசம், பூசம், ஆயில்யம்

புனர்பூசம்-

முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடாமல் போராடி வெற்றி பெறும் வாரம்.
தேவைகள் பூர்த்தியாகும்.அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.அதன் காரணமாக உழைப்பு அதிகமாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். புதிய கிளைகள் தொடங்குவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு தள்ளிப் போகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

செவ்வாய்-
பணவரவு எதிர்பார்த்த படியே கிடைக்கும் வருமானம் இருமடங்காக இருக்கும் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். அசையும் அல்லது அசையா சொத்துக்களில் முதலீடு செய்யும் எண்ணம் தோன்றும்.

புதன் -
குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் சிறு ஏமாற்றத்தை தரும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தால் உங்களுக்கு இன்று வேலைக்கான தகவல் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு தொடங்குவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும்.
*********************************************

பூசம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.
தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனை தோன்றும். அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

செவ்வாய் -
உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் சாதகமான நிலை இருக்கும்.

புதன் -
வியாபாரம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீடு மற்றும் தொழில் தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
முக்கியமான கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக சந்திப்புகள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவதால் செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.வெளிநாடு செல்லும் முயற்சிகளில் சாதகமான தகவல் கிடைக்கும்.வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை தொடர்பான தகவல் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி பகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
************************************************************

ஆயில்யம் -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சீராக வளர்ச்சி ஏற்படும்.
வியாபாரிகள் புதிய கிளைகள் ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

செவ்வாய் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும், புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன்-
தேவையற்ற வாக்குவாதங்கள் எங்கும் செய்ய வேண்டாம். சாலை போக்குவரத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனப் பழுது ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களுடைய ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

வியாழன்-
அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த சில பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும், நன்மைகளும் கிடைக்கும்.

வெள்ளி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான தகவல் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கு தேவையான பண வரவு கிடைக்கும்.

சனி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். நண்பர்களோடு நேரத்தை செலவிட வெளியே சென்றால் பிரச்சினைகளோடுதான் வீடு திரும்ப வேண்டியது வரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதற்காகவும், எந்த விஷயத்திற்கும் கோபப்படாமல் இருப்பதும், உணர்ச்சிவசப்படாமல் இருப்பதும் நல்லது.
வணங்கவேண்டிய தெய்வம் -
மதுரை மீனாட்சி சொக்கநாதர் அல்லது அருகில் இருக்கும் அம்பாள் சமேத சிவாலயம் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்