இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும்.

கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.

சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

கன்னி: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் திடீரென முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: அடுத்தடுத்து வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். அடுத்தவர் மனம் காயப்படும் படி பேசாதீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் எதி்ர்பாராத மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

மகரம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்