இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

மிதுனம்: பிள்ளைகளால் உறவினர் மத்தியில் பெருமையடைவீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விஐபியுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். பணவரவு உண்டு.

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சொத்து விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

தனுசு: பிள்ளைகள் மீது பாசமழை பொழிவீர்கள். தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

கும்பம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.

மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படக் கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்